நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக நிறைய செலவு செய்து படத்தின் சண்டைக் காட்சிகளை மிக பிரம்மாண்டமாக எடுப்பதற்காக நெல்சன் பல திட்டங்களை கையில் வைத்து இருந்தார். அப்படி ஒரு திட்டமாக பீஸ்ட் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியின் போது ஒரு மிகப்பெரிய செட் அமைத்து அதில் சண்டைக்காட்சியை எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்.
அதன்படி பீஸ்ட் படத்திற்காக ஒரு பிரபல நகைக்கடை போன்று ஒரு மிகப்பெரிய செட் அமைக்க வேண்டும் கலை இயக்குனரான கிரனிடம் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் அவர் சுமார் 8 கோடி ரூபாய்க்கு பிரபல நகைக்கடை போன்று ஒரு செட் அமைத்து இருக்கிறாராம். அந்த செட்டில் தான் விஜய்யின் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்காக 8 கோடி வரை செலவாகி இருப்பது இந்த செட்டிற்க்காக மட்டுமே.
இந்த செட்டில் ஆன செலவை மொத்தமாக பிரபல நகைக் கடை ஒன்று ஸ்பான்சர் செய்து இருக்கிறது . அது எந்த நகை கடை என்றால் வெகுகாலத்திற்கு முன்பு விஜய் அவர்கள் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்து இருப்பார். இன்று கூட அந்த விளம்பரத்தைப் பார்த்தால் அல்லது அந்த நகைக்கடை பெயரைச் சொன்னவுடன் நம் அனைவருக்கும் விஜய் ஞாபகம் தான் வரும். விஜய் நடித்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை தான் அது. இந்த செட்டை போடுவதற்கு ஆன மொத்த செலவு 8 கோடி ரூபாய்க்கும் ஸ்பான்சர் செய்து இருக்கிறது.
என்ன குமாரு விஜய் மேல அவ்வளவு பாசமா அவர் சம்பளம் வாங்கிட்டு தானே விளம்பரத்தில் நடித்து இருப்பார் என்று நினைப்பவர்களுக்கு இது ஒன்றும் ஜோஸ் ஆலுக்காஸ் சும்மா தூக்கி விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக கொடுக்கவில்லை. ஜோஸ் ஆலுக்காஸ் 8 கோடி ரூபாய் தொகையை அவர்களின் பிராண்ட் புரோமோஷன்காக தான் கொடுத்து இருக்கிறது.
இந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை போன்ற செட்டில் தான் விஜய் தீவிரவாதிகளை புரட்டி எடுக்கிறார். விஜய் இந்த படத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்பதால் படத்தின் முக்கியமான நேரத்தில் வரக்கூடிய சண்டைக்காட்சியை, இந்த செட்டில் தான் எடுத்து இருக்கின்றனர்.
அதுபோக விஜய்யின் பீஸ்ட் படத்தின் மிக முக்கிய சண்டைக்காட்சி ஆக இருப்பதால் இந்த இடத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் தன்னுடைய விளம்பரத்தை கொடுத்தால் மிகப்பெரிய அளவில் அது மக்களைச் சென்றடையும் என்ற எண்ணத்துடன் தான் இந்த செயலை ஜோஸ் ஆலுக்காஸ் செய்திருக்கிறது.
இது ஒன்றும் புதிதல்ல இதுபோல ஹீரோக்கள் படத்தில் ஓட்டக்கூடிய வாகனங்கள் ஹீரோக்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களை தானாக முன்வந்து விளம்பரத்திற்காக நிறுவனங்கள் இயக்குனரிடம் கேட்டுக்கொள்ளும் . அப்படி ஒரு முயற்சிதான் இந்த முயற்சியும் . அந்த முயற்சியில் பல நேரங்களில் மக்களிடம் இந்த விளம்பரம் சென்று போய் சேர்ந்திருக்கிறது . அந்த வரிசையில்தான் இதுவும் அமைந்திருக்கிறது