சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் நிறைய மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. அதாவது பெரிய நட்சத்திரங்களின் படங்களில் மற்ற மொழியில் உள்ள சினிமா பிரபலங்களில் பிரபலமான நடிகர்கள் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் லோகேஷின் விக்ரம் படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகி இருந்தது.
அதற்கு அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படத்திலும் மோகன் லால், ஜாக்கி ஷெரிஃப், சிவராஜ்குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த வகையில் சமீபத்தில் லியோ படத்திலும் எண்ணில் அடங்காத பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதற்காக நிறைய பட்ஜெட்டும் தேவைப்படுகிறது.
ஆனாலும் இப்போது நிறைய மல்டி ஸ்டார் படங்கள் எடுப்பதற்கு காரணம் இருக்கிறது. அதாவது பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்திய படமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு மொழியை மட்டும் நம்பி இல்லாமல் எல்லா மொழிகளிலும் இப்போது படங்களை வெளியிட்டு கலெக்ஷனை அள்ளி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனை தூக்கி விட வரும் பிரபலம்
அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் வெளியாகும் படங்கள் உடனடியாகவே ஓடிடியிலும் வெளியாகி விடுகிறது. இதனால் ஓடிடியிலும் மல்டி ஸ்டார் படங்கள் நல்ல விலைக்குப் போகிறது. அந்த வகையில் இப்போது சிவகார்த்திகேயனின் ஒரு படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறாராம். இப்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சற்று சரிய தொடங்கி இருக்கிறது. அதை தூக்கி விடுவதற்காக தான் மோகன்லால் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து இருக்கிறார்.
ஆகையால் மலையாள சினிமாவிலும் சிவகார்த்திகேயன் ஜொலிக்க இருக்கிறார். மேலும் மற்ற நடிகர்களும் இப்போது மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது சினிமாவின் மிகப்பெரிய வளர்ச்சியாக தான் பார்க்கப்பட்டு வருகிறது.