ஒரே படத்தில் பாலிவுட்டை ஒரு கை பார்க்க போகும் பிரதீப்.. விடாமல் கொட்டும் பண மழை

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் கமலஹாசனின் விக்ரம், பொன்னியின் செல்வன் பாகம் 1 உள்ளிட்ட படங்களுக்கு பின் மாபெரும் சாதனையை படைத்த திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த நிலையில், படம் முழுவதும் காமெடி, காதல், கலாட்டா என பட்டையை கிளப்பியிருக்கும்.

இன்றைய கால இளைஞர்கள் எப்படி தங்களது காதலை புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ஏ.ஜி.எஸ்.தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிட்டது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இப்படத்தில் நடித்த சத்யராஜ், ராதிகா, இவானா, ரவீனா,யோகி பாபு உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் பேசப்பட்ட நிலையில், குடும்பத்துடன் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடினர். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இப்படம் தமிழில் ஹிட்டானதையடுத்து, தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்ட நிலையில் அங்கும் 90 கோடி வரை வசூலை அள்ளி குவித்தது.

ரஜினிகாந்த் முதல் சிம்பு வரை பிரதீப் ரங்கநாதனை பாராட்டு மழையிலும், பண மழையிலும் நனைய வைத்தனர். தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ரஜினியின் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், இன்னும் உறுதிப்படுத்த படாமல் உள்ளது. இதனிடையே லவ் டுடே படத்தின் மற்றொரு சாதனையாக ஹிந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் படங்கள் பொதுவாக அதிக ஆக்ஷன், காதல், கலாட்டாக்கள்,வித்யாசமான கதைகளில் தான் படங்கள் வெளியாகும். அவர்களின் படங்களை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இயக்குனர்கள் ரீமேக் செய்து வெளியிடவும் செய்வார்கள். இதனிடனையே லவ் டுடே படத்தின் சாதனையை அறிந்து தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

கதாநாயகனாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளதாகவும், இயங்குனர் தாவிட் தவான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியில் எண்ட்ரியாகி அவரே இப்படத்தை இயக்குவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே நம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருந்த அட்லீ, மணிரத்னம் உள்ளிட்டோர் பாலிவுட்டிற்கு சென்று படங்களை இயக்கி வரும் நிலையில், இந்த லிஸ்டில் பிரதீப் ரங்கநாதனும் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.