திரும்பத் திரும்ப வேதாளத்துக்கு வரும் வம்பு.. லண்டன் போனாலும் சிம்புவை துரத்தி வெச்ச பெரிய ஆப்பு

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக தற்போது கடினமாக உழைத்து வருகிறார். வெந்து தணிந்தது காடு, பத்து தல திரைப்படங்களுக்கு பிறகு சிம்புவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் அவருடன் படம் பண்ணுவதற்கும் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

சிம்புவை பொறுத்த வரைக்கும் அவர் சினிமாவில் எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறாரோ, அதே அளவுக்கு ஜாலியாக பொழுதை கழிக்கும் பேர்வழி. ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு சிம்பு ஓய்வெடுப்பது என்பது வழக்கமான ஒன்று. தற்போது பத்து தல திரைப்படத்திற்குப் பிறகு STR 48 திரைப்படத்தின் அப்டேட் வெளியானது. அந்த அப்டேட் வெளியானதும் சிம்பு லண்டனுக்கு சென்று விட்டார்.

லண்டனுக்கு சென்ற சிம்புவை விடாமல் துரத்துகிறது ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து, STR 48 இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாராக போகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கான வேலைகள் தான் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. உலக நாயகன் தயாரிப்பில், சிம்பு நடிப்பது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அடுத்து அவர் கொரோனா குமார் எனும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கொரோனா குமார் படத்திலிருந்து சிம்பு விலகி விட்டதாகவும், இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும் கூட சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த படம் தான் சிம்புவுக்கு மிகப்பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெந்து தணிந்தது காடு படத்திற்குப் பிறகு, சிம்பு அடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் வேல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்து தான் படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் பெயரில் உறுதியான படம் தான் கொரோனா குமார். சிம்பு அந்த படத்தில் ஒரு வாரமே நடித்துவிட்டு, அப்படியே கண்டு கொள்ளாமல் STR 48 அப்டேட்டிற்கு பிறகு லண்டன் கிளம்பிவிட்டார். இதனால் செம கோபத்தில் இருந்த ஐசரி கணேஷ் சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

எப்படி இருந்தாலும் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்திருக்கிறது. இதனால் சிம்பு உடனடியாக லண்டனில் இருந்து திரும்ப வாய்ப்பிருக்கிறது. சிம்பு STR 48 க்கு முன்பு கொரோனா குமார் படத்தில் நடிக்கப் போகிறாரா, அல்லது ஒரே வேளையில் இரண்டு படங்களிலுமே நடித்துக் முடிக்க போகிறாரா என்பது இனிவரும் அப்டேட்டுகளின் மூலம் தான் தெரியும்.