லாரன்ஸ் பிள்ளைகளுக்கு விஜய் செய்யும் உதவி.. விரைவில் இணைய உள்ள கூட்டணி

இன்றைய காலகட்டத்தில் தங்களைத் தாங்களே பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல பேரும் அவர்கள் செய்யும் சின்ன உதவிகளை கூட உடனே போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டு பெயர் வாங்கிக் கொள்கின்றனர். லைக்ஸ்காகவும், கமெண்ட்ஸ்க்காகவும் கூட இதுபோன்ற சேவைகளை செய்வது போல் காட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல ஹீரோக்கள் அவர்கள் செய்யும் உதவிகளை எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் விளம்பரப்படுத்துவது இல்லை. அவர்களால் பயனடைந்தவர்கள் வெளியில் வந்து சொல்லும் வரை யாருக்கும் இவர்கள் செய்யும் உதவி தெரியாது. இப்படி பல உதவிகள் செய்து வரும் தளபதி விஜய் பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது தான் லாரன்ஸ் விஜய் பற்றி பேசியிருக்கிறார். இவர் உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் டிரஸ்ட் நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தளபதி விஜய் இந்த டிரஸ்டுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறாராம். மேலும் லாரன்ஸ்ஸின் டிரஸ்ட்டை சேர்ந்த குழந்தைகள் விஜய்யின் படங்களை பார்க்க ரொம்பவே ஆசைப்படுவார்களாம். இது பற்றி ஒரு முறை தளபதியிடம் சொன்னபோது அந்த குழந்தைகளுக்காக மட்டுமே தனி காட்சி ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கிறார். இதுபோன்று விஜய் பல உதவிகளை செய்து வருவதாக லாரன்ஸ் சொல்லியிருக்கிறார்.

லாரன்ஸ் மற்றும் விஜய் நிறைய பாடல் காட்சிகளுக்கு ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்து இருந்தாலும், திருமலை திரைப்படத்தில் ‘ தாம் தக்க தீம் தக்க’ பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடியது மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நடனத்தின் மூலம் தான் லாரன்ஸ் என்னும் நடன இயக்குனரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. விஜய் எந்தவிதப் போட்டியுமின்றி தனக்கு இணையாக லாரன்ஸை ஆட வைத்திருப்பார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட இந்தக் கூட்டணியை மீண்டும் எதிர்பார்ப்பதாக பல நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார்கள். இது பற்றி ராகவா லாரன்ஸிடம் கேட்ட பொழுது எதுவுமே தன்னுடைய கையில் இல்லை என்றும் அப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக அதை பயன்படுத்திக் கொள்வேன் என்றும் சொல்லி இருக்கிறார்.