72 வயதிலும் 1200 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் ரஜினி.. ரெண்டு வருடத்தில் 4 படங்களில் பிசி

Rajinikanth: வயசு வெறும் நம்பர் தான் உடம்பில் தெம்பும், மனதில் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் எப்பொழுது வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற உதாரணத்திற்கு தலைவர் அவருடைய 72 வயதிலும் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டு வருகிறார். அதே மாதிரி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களும் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு ரஜினியின் வீட்டு கதவை தட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இப்ப உள்ள காலத்திற்கு ஏற்றபடி எத்தனையோ புது நடிகர்கள் மற்றும் இளம் ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை எல்லாம் விட எப்போதுமே ரஜினி தான் பெஸ்ட் என்று அவரை ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ரஜினி இன்னும் இரண்டு வருடத்திற்கு நான்கு படங்களில் கமிட் ஆயிருக்கிறார்.

அதில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இப்போது இப்படத்திற்காக ஃப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் ரஜினியின் ஸ்டைலிங் லுக் கொண்டு வருவதற்காக ஆலிம் ஹக்கீம் ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கப் போகிறார். இது ரஜினியின் கனவு படம் கூட சொல்லலாம். ஏனென்றால் ரொம்ப வருடமாகவே லோகேஷ் உடன் ஒரு படத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்று இவரது ஆசையாக கனவு கோட்டை கட்டி வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த ஒரு விஷயம் கிட்டத்தட்ட நிறைவேற போகிறது. இப்படத்தின் பட்ஜெட் 250 முதல் 300 கோடி வரை இருக்கப் போகிறது.

அடுத்ததாக தற்போது ரஜினியின் சாதனை படமாக இருக்கிறது நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் தான். அந்த வகையில் ரஜினியின் 172வது படத்தை நெல்சன் தான் இயக்கப் போகிறார். அத்துடன் ஜெயிலரின் இரண்டாம் பாகம் தாறுமாறாக இருக்க வேண்டும் என்று மிக முனைப்புடன் சுற்றி வருகிறார்.  இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 500 கோடி அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தலைவர் 173 படத்தை கௌதம் மேனன் இயக்கப் போகிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க கௌதம் மேனனின் ஸ்டைலில் இருக்க வேண்டும் என்று ரஜினியே திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அந்த வகையில் இன்னும் இரண்டு வருடத்திற்கு பம்பரம் போல சுற்றி அடிக்க போகிறார்.