1000 படங்களுக்கு மேல் இசையமைத்த பெருமைக்குரிய இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருக்கும் மிக முக்கியமான நண்பர் மற்றும் இவர்கள் வெற்றிக்கு உதவிய மிக முக்கியமான மியூசிக் டைரக்டர் கூட.
ஆனால் இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜாவை இதுவரை ரஜினியும், கமலும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுடைய படங்களிலும் வாய்ப்பு கொடுக்க தயாராகவில்லை. ஆனால் ரஜினி மற்றும் கமல் இருவரும் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு அவர்களுடைய ஆரம்ப கால படங்களில் இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த நன்றி கடனுக்காகையாவது யுவன் சங்கர் ராஜாவிற்கு தங்களுடைய படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்பை கொடுத்து முன்னேற்றி விடலாம். இருப்பினும் யுவனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என ரஜினி மற்றும் கமல் இருவரும் நினைத்தாலும், அவரிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கத்தால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் இருவரும் கொஞ்சம் தள்ளியே இருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் பழக்கவழக்கங்கள் அவர் இரவில் வேலை செய்து பகலில் உறங்க கூடியவர். யுவன் ஆந்தையை விட மோசமாக இரவில் முழித்துக் கொண்டு பகலில் தூங்கக்கூடியவராம். அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜா வேலை செய்யும் பொழுது அந்த இயக்குனரும் நடிகரும் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது அவருடைய கட்டளை.
இதனால் ரஜினி, கமல் இருவருக்குமே அவரை பிடிக்கவில்லை. அதனால் அவரை படங்களில் சேர்க்கவில்லை. ஆனால் ரஜினி வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தபொழுது தனது குடும்பத்தில் இருந்து வந்த அனிருத் அந்த வாய்ப்பை தட்டி பறித்து விடுவார்.
அதனால் ரஜினி இனிமேல் யுவன் சங்கர் ராஜாவை பயன்படுத்த மாட்டார். ஏனென்றால் தற்போது டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் இசையமைப்பாளராக பணியாற்றும் அனிருத் ரஜினியின் மனைவி லதாவின் சொந்த அண்ணன் மகனாவார். இருப்பினும் திறமைசாலிகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் யுவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராஜா வீட்டு கன்னுக்குட்டியாகவே தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.