உங்க பழைய வேலைய எல்லாம் இங்க வச்சிக்காதிங்க.. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 171 வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்திருக்கிறார். ரஜினி ரொம்பவே ஆசைப்பட்டு வேலை செய்ய நினைத்தது லோகேஷ் உடன் தான். ஏற்கனவே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

என்னதான் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்ற விரும்பினாலும், ரஜினி சில கட்டுப்பாடுகளையும் அதில் விதித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் தான். இந்த படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் ரஜினியை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது அவருடைய எல் சி யு கான்செப்ட்டிற்காகத்தான். விக்ரம் படத்தின் சில காட்சிகளை கைதி படத்தின் காட்சிகளோடு இணைத்து காட்டியதால் தான் அவர் இயக்கிய லியோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு கிளம்பியது. கார்த்தி, கமலஹாசன் கூட்டணியில் தளபதி விஜய் இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள்.

சூப்பர் ஸ்டார் போட்ட கண்டிஷன்

லியோ படம் ரிலீஸ் ஆன பிறகு, எந்த எல் சி யு கான்செப்ட்டிற்காக லோகேஷ் கொண்டாடப்பட்டாரோ அதுவே அவருக்கு நெகட்டிவ் ஆக அமைந்துவிட்டது. அந்த படத்தில் எல் சி யு கதாபாத்திரங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருந்ததால் படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பெரிய ஏமாற்றத்தையும் கொடுத்தது.

இந்த விஷயத்தால் ரஜினி ரொம்ப உஷாராகிவிட்டார். என்னுடைய படத்திற்கு இந்த எல் சி யு கான்செப்ட் வரவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். எனக்காக பிரஷ்ஷாக கதை எழுதுங்கள், உங்களுடைய LCU கதாபாத்திரங்கள் எதுவுமே இதில் இருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். ரஜினி சொன்ன கண்டிஷன்களுக்கு லோகேஷ் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்திற்காக ரஜினி நெல்சன் உடன் இணைந்து பணியாற்றிய பொழுது திரைக்கதையில் அதிகமாக தலையிடுகிறார் என சொல்லப்பட்டது. இதனால் இந்த படம் எப்படி வரப்போகிறது என்று கூட கமெண்ட் செய்தார்கள். ஆனால் நெல்சனுக்கு அந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. லியோ படத்தால் நொந்து போய் இருக்கும் லோகேஷுக்கு அதேபோன்று தலைவர் 171 கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.