கார்ப்ரேட் நிறுவனங்கள் பலவும் கோடிக்கணக்கில் நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை கொடுத்து, அவர்களுடைய விளம்பரப் படங்களில் நடிக்க வைக்கின்றனர். இதனால் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் சொல்கிறார்கள் என்று, உடல் நலத்திற்கு தீங்கான ஒருசில உணவுப் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் இது போன்ற எந்த விளம்பரங்களிலும் நடிக்காமல் ரசிகர்களின் நலனை மட்டுமே கருதுகிறார். சமீபத்தில் பிரபல கார் நிறுவனம் ஒன்று சூப்பர் ஸ்டாரை தங்களது கார் விளம்பரத்தில் நடிக்க சொல்லி 200 கோடி கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த ரஜினி, ரசிகர்கள்தான் முக்கியம் என்று நெத்தியில் அடித்தார் போல் சொல்லிவிட்டார். இதனை அறிந்த ரசிகர்களும், ‘சூப்பர்ஸ்டார்னா கெத்து தான்’ என்று காலரைத் தூக்கி விடுகின்றனர்.
ஆனால் இதற்கு மாறாக நடிகர் சிவகுமாரின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா உள்ளிட்டோர் காபி விளம்பரங்களில் நடித்து காசு தான் முக்கியம் என்பதை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கும் சிவக்குமார் வீட்டில் யாரும் காபி குடிக்க மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா இருவரும் பணத்திற்காக சன் ரைஸ் காபி விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.
அதிலும் சூர்யா அந்த விளம்பரத்திற்காக டப்பிங் பேச வந்தபோது, விளம்பரத்திற்கு கவிஞர் பா விஜய் பாடல் எழுத, இசையமைப்பாளர் கார்த்திக் சன் ரைஸ் காபி விளம்பரத்தில் சூர்யாவையே நான்கு வரி சிங்கிள்சை பாடவும் வைத்தார்.
படத்தை விட விளம்பரத்தில் ஆர்வம் காட்டி சூர்யாவும், முதன்முதலாக பாடி ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.