நின்றுபோன படத்தை தூசி தட்டும் ரஜினி.. தலைவர் முடிவால் உச்சகட்ட சந்தோஷத்தில் லைக்கா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 70 வயதை கடந்தும் தன்னுடைய பட வேளையில் பிஸியாக உள்ளார். இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் நடித்த வருகின்றனர்.

இதைத்தொடர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இளம் இயக்குனர் ஒருவரின் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த இயக்குனரை அழைத்து கதை கேட்டுள்ளார்.

ஆனால் அவரின் ஆட்டிடியூட் சரியில்லாத காரணத்தினாலும், கதை பிடிக்காததாலும் ரஜினி படம் பண்ண வேண்டாம் என கூறிவிட்டார். ஆனாலும் ரஜினிகாந்த் அந்த இளம் இயக்குனர் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்ததன் காரணமாக கதையை வேறு மாதிரி மாற்றிக் கொண்டு வாருங்கள் என்று நிறைய வாய்ப்புகள் கொடுத்துள்ளார்.

ஆனால் எத்தனை முறை கதை கொடுத்தாலும் ரஜினியை திருப்தி படுத்த அந்த இயக்குனரால் முடியவில்லை. அதாவது சிபி சக்கரவர்த்தியை தான் அழைத்த படம் பண்ணலாம் என ரஜினி கூறியுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் கெடுத்துக் கொண்டார்.

மேலும் அந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சுபாஸ்கரன் தயாரிப்பதாக இருந்தது. இப்போது சிபிச் சக்கரவர்த்தி படத்தை ரஜினி வேண்டாம் என்று ஒதுக்கியதால் லைக்கா மிகுந்த மன வருத்தத்தில் இருந்தது. ஆனால் ரஜினி இப்போது நின்று போன படத்தை தூசி தட்டி உள்ளார். அதாவது பி வாசு படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களினால் அது தடைப்பட்டு போனது. இப்போது பி வாசு லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடித்த கையோடு ரஜினி படத்தை பி. வாசு இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. ரஜினி இந்த வாய்ப்பை இந்நிறுவனத்திற்கு கொடுத்ததால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.