Kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அன்றிலிருந்து இன்று வரை தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தை தக்க வைத்துள்ளார். நடிப்பின் அரக்கன் என்று கமல்ஹாசன் அவர்களை கூறலாம்.
இவர் நடிப்பில் வெளிவந்த மூன்றாம் பிறை நாயகன் இந்தியன் ஆகிய படங்கள் தேசிய விருது பெற்றன. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் வங்காளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளதால் இவரை உலக நாயகன் என்றும் பெயர் வைத்து அழைக்கிறோம்.
கமல் அளவுக்கு ரஜினிக்கு தைரியம் இல்ல..
சாதாரணமாக ஒரு மனிதன் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பது சாதனை அல்ல, தோல்வியிலும், பல இன்னல்களிலும் அவர் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதே மிகப்பெரிய சாதனை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நினைத்துப் பார்க்கும்போது.கமல்ஹாசன் போல் இன்னல்கள் இருந்துருந்தால் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் இருந்துருப்பாரா என்பது சந்தேகமே. கமல் அவர்கள் ஏகப்பட்ட இன்னல்களையும் ஏகப்பட்ட சிக்கல்களையும் தாண்டி நிறைய படம் தோல்விகளையும் தாண்டி இந்த இடத்தை தக்க வைத்துள்ளார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
அந்தவகையில் நடிகர் மணிகண்டன் அவர்கள் தற்போது ஒரு நேர்காணலில் உலகநாயகன் கமல் அவர்களை பற்றி உயர்வாக பேசியுள்ளார். அதாவது எந்த ஒரு கலைஞனும் உடைந்து போவதற்கு ஒரு காரணம் போதும் ஆனால் அத்தனை காரணங்கள் இருந்தும் கமல் அவர்கள் உடைந்து போகவில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது ஒரு கலைஞன் காணாமல்போவதற்கு ஒரு காரணம் போதும், ஒரு படத்தின் தோல்வி போதும், ஒரு படத்தின் வெற்றி போதும், ஒரு எலும்பு முறிவு, ஆனால் நடிகர் கமல்ஹாசன் அவர்களோ ஒரு டிவோர்ஸ், பிரேக்கப்ஸ், மிகப்பெரிய பணத்தட்டுப்பாடு, 16 எலும்பு முறிவுகள் இதுபோல் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இது அனைத்துமே பிரச்சினையாக பார்க்காமல் சவாலாக எடுத்துக் கொண்டு அனைத்தையும் சமாளித்து எட்டாத உயரத்தில் உள்ளார் கமல்ஹாசன்.
தான் செல்லும் பாதையில், தான் சரியாக இருக்கிறோமா? என்பதை பார்க்க கூடிய ஒரு மனிதர். அவர் பார்க்காத உயரமும் இல்லை, அவர் பார்க்காத சரிவும் இல்லை. நீங்க போடுற ஹேட்டர் போஸ்டும், நெகட்டிவிட்டியும் அவர் ஊதி தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பார் என கமல்ஹாசன் அவர்களை புகழ்ந்து கூறியுள்ளார் நடிகர் மணிகண்டன்.
“தி அகாடமியில்” சேர கமல்ஹாசனுக்கு அழைப்பு!
இது மட்டுமல்லாமல் தற்போது மதிப்புமிக்க “தி அகாடமியில்”சேர கமல்ஹாசனுக்கு அழைப்பு! ஆயுஷ்மான் குரானா, திரைப்பட தயாரிப்பாளர் பயல் கபாடியா,பாடகி- நடிகை அரியானா கிராண்டே மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 531 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் உறுப்பினர்கள் ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிக்க முடியும். தற்போது ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிக்க கமல்ஹாசன் அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்ள போகிறது நம் தமிழ் சினிமா.