பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்களுக்கு சண்டை வருகிறதோ, இல்லையோ இவர்களை வைத்து இவர்களின் ரசிகர்களிடையே சண்டை இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு என்னுடைய நடிகர் தான் பெரிய நடிகர், உன்னுடைய நடிகர் எல்லாம் இந்த மாதிரி நடிக்கவே முடியாது என்று ஒவ்வொரு நடிகர்களையும் மாத்தி மாத்தி குறை சொல்லிக் கொண்டே இருப்பது வழக்கமாக இருக்கிறது.
அதில் ரஜினி கமல் ரசிகர்கள் அதிகமான ஆர்ப்பாட்டத்தை செய்து ரொம்பவே ஓய்ந்து போய்விட்டார்கள். அதன் பின் இவர்களுக்கு அடுத்து அஜித் விஜய் சண்டைகள் மட்டுமே பெரிதாக நடந்து வருகிறது. இந்நிலையில் பல வருடங்களாக ரஜினி கமல் ரசிகர்கள் பிரச்சினை இல்லாமல் இருந்து வந்த சூழலில் தற்போது மீண்டும் இவர்கள் அடித்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது.
அதாவது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தின் டீசரை வெளியிட்டார்கள். அதில் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதை பார்த்த கமல் ரசிகர்கள், ரஜினி தொடர்ந்து தோல்வி படத்தை கொடுத்ததினால் தற்போது கமல் ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார். அதனால் தான் அவர் படத்தில் அனைத்து மாநில நடிகர்களை ஒன்று சேர்க்கும் விதமாக விக்ரம் படத்தை போல் காப்பியடித்து எடுத்து உள்ளார் என்று நக்கலாக பேசி வருகிறார்கள்.
அத்துடன் விக்ரம் படத்தைப் போல 500 கோடிக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் ரஜினிக்கு வேறு வழி தெரியாமல் கமலை பாலோ பண்ணுகிறார். இனிமேலும் தொடர்ந்து ரஜினி அதை தான் பண்ணப் போகிறார் என்று கிண்டலடித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் என்னதான் ரஜினி ஆசைப்பட்டாலும் கமல் அளவுக்கு பிரம்மாண்டமாக நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் அது விக்ரம் படம் போல் வெற்றி கொடுக்காது என்று கமல் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.
இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் சும்மாவா இருப்பாங்க. அவங்க ரஜினிக்காக, கமல் படத்தை தாக்கி பேசியதோடு மட்டுமில்லாமல் கமல் இத்தனை நாளாக எங்கு இருந்தார் என்று அவர் நடித்த படங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். அத்துடன் அவரது படம் குடும்பத்துடனும் பார்க்க முடியாது. தலையும் புரியாமல் வாழும் புரியாமல் தான் குழப்பத்திலேயே அவர் நடிப்பார் என்று தாக்கி வருகிறார்கள்.
அத்துடன் விக்ரம் படம் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணம் லோகேஷ் உடைய கதை தான். அடுத்ததாக அதில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில்காக தான் அந்த படமே இந்த அளவுக்கு ஹிட் ஆனது என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இதை பார்க்கும் பொழுது ரஜினி கமல் ரசிகர்கள் இத்தனை நாளாக சும்மா இருந்தவர்களை லோகேஷ் அதை ஊதி கெடுத்து விட்டார் என்பதற்கு போல் தான் இவர்களின் ரசிகர்கள் நடவடிக்கை இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மறுபடியும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டே ஆரம்பமாகியுள்ளது.