உதயநிதி கூப்பிட்டு வர மறுத்த ரஜினி.. கூட்டணி போட ஒப்புக்கொண்ட கமல்

உதயநிதி சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து குறுகிய காலகட்டங்கள் இருந்தாலும் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் வாங்கும் அளவிற்கு வித்தியாசமான கதையில் நடித்து மக்களை கவர்ந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அரசியலிலும் ஆர்வம் இருந்ததால் அதில் நின்று வெற்றி பெற்று விட்டார். அதன் பின் இனிமேல் சினிமாவிற்கு வரமாட்டேன் என்று சொன்ன இவர் ஏற்கனவே கமிட் ஆகி இருந்த படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த படம் தான் மாமன்னன். இப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சி இன்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் உதயநிதி அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுக்கு உதயநிதி தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிக்கு வருமாறு கூப்பிட்டு இருக்கிறார். ஆனால் ரஜினி மட்டும் உதயநிதி கூப்பிட்டும் கலந்து கொள்வதற்கு தயாராக இல்லை. அதற்கு காரணம் இது ஒன்னும் அந்த அளவுக்கு முக்கிய நிகழ்ச்சியும் இல்லை. அத்துடன் அரசியலிலும் தேவையில்லை என்பதால் மறுப்பு தெரிவித்து விட்டார்.

அடுத்தபடியாக கமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். அத்துடன் உதயநிதி எத்தனை நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் கலந்து கொள்ளப் போகிறார் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சிக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் தான்.

மேலும் இது நாடாளுமன்ற கூட்டணிக்கான ஒரு நிகழ்ச்சி என்றும் அதனால் முக்கியம் என்பதால் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார். அதனால் உதயநிதி எப்பொழுது கூப்பிட்டாலும் இவர் பின்னாடியே கமல் வந்து நிற்பார்.

மேலும் இந்த நிகழ்வு மூலம் கமல் இவருடைய காரியங்களை சாமர்த்தியமாக செய்துவிடலாம் என்பது தான் அவருடைய எண்ணமே. இது சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்தக் கூட்டணி கண்டிப்பாக பொருந்தும் என கமல் உறுதியாக நம்புகிறார். அத்துடன் இனிமேல் கமல் தனியாக தேர்தலில் நிற்க மாட்டார் என்றும் உறுதியாக தெரிகிறது.