கமலை பார்த்து சுதாரித்துக் கொண்ட ரஜினி.. கெத்தை விடாமல் பிடித்து தொங்கும் சூப்பர் ஸ்டார்

ரஜினி தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் திரைப்படமே இன்னும் வெளியாகவில்லை, ஆனால் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உண்டாகி வருகிறது. சமீபத்தில் கூட லைக்காவுடன் இவர் இணைய இருக்கும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் அப்படத்தை இயக்குகிறார். அடுத்த வருடம் இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தலைவர் 171 திரைப்படத்திற்கான அறிவிப்பும் அடுத்ததாக வர இருக்கிறது. இப்படி இளம் நடிகர்களை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கும் ரஜினி ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்கிறாராம்.

அதாவது தான் நடிக்கும் எந்த திரைப்படத்திலும் முன்னணி ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க கூடாது என அவர் விரும்புகிறாராம். ஏனென்றால் வெற்றியோ, தோல்வியோ அதற்கு தான் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதனாலேயே நெல்சன் சிவகார்த்திகேயனை ஜெயிலர் படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கேட்டபோது மறுப்பு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இப்போது ஞானவேல் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று ஆசைப்பட்டதற்கும் தடை போட்டு இருக்கிறார். இது உலக நாயகனை பார்த்ததால் வந்த சுதாரிப்பு தான். அதாவது சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

ஆனால் அந்த கதாபாத்திரம் கமலையே ஓரங்கட்டி இப்போது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த ஒரு கேரக்டர் தான் விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம் என்ற ரீதியிலும் பேசி வருகின்றனர். அதுவே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இதை கமல் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போல் காட்டிக் கொண்டாலும் சிறு உறுத்தல் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே இப்போது ரஜினி தன் முடிவில் கராராக இருக்கிறார். எங்கு டாப் ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் வந்து பெயரை தட்டி சென்று விடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் இயக்குனர்களுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அந்த வகையில் ரஜினி தன்னுடைய கெத்தை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்.