சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும் போதே இந்த படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வி பெறுமா என்ற கணிப்பு அவருக்கு எப்போதுமே இருக்குமாம். இதற்கு காரணம் சினிமாவில் அவருடைய அனுபவம் என்று சொன்னாலும் அவருக்குள் இருக்கும் ஆற்றலும் ஒரு காரணம்.
இப்போது கூட ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நெல்சனை ரஜினி தேற்றி வருகிறாராம். அப்படிதான் தனுஷுக்கும் ஒரு அறிவுரை ரஜினி சொல்லி உள்ளார். ஆனால் அப்போது அதை ஏற்க மறுத்ததால் தற்போது பல பிரச்சனைகளில் தனுஷ் சிக்கி வருகிறார்.
அதாவது தனுஷ் தனது சொந்த சம்பாத்தியத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு உள்ள போயஸ் கார்டனில் 80 கோடிக்கு இடம் வாங்கினார். தனது மருமகன் மகளுக்காக இடம் வாங்கியதை நினைத்து சூப்பர் ஸ்டார் பெருமை பட்டு கொண்டாலும் மனதில் ஏதோ சங்கடம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இந்த இடம் வாங்கினால் கண்டிப்பாக பிரச்சினையை சந்திக்க நேரிடும் அதனால் வேறு இடம் வாங்கிக் கொள்ளலாம் என்று தனுஷிடம் எச்சரித்துள்ளார். ஆனால் போயஸ் கார்டனில் இருப்பதே ஒரு அந்தஸ்து தான். தொழிலில் வெற்றி கண்ட பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் போயஸ் கார்டனில் சங்கமித்து உள்ளனர்.
அப்படிப்பட்ட ஏரியாவில் இடம் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல. இதனால் சூப்பர் ஸ்டார் சொல்லியும் அதை மீறி தனுஷ் இடம் வாங்கினார். அதற்கான பூமி பூஜையும் செய்து தற்போது வீட்டையும் கட்டி முடித்து குடியேறி விட்டார். ஆனால் இரண்டு வருடமாகவே தனுசை சுற்றி பிரச்சனை நடந்து கொண்டே இருக்கிறது.
அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தொடர் தோல்வியைத் தழுவி வருகிறது. சினிமாவில் தான் இப்படி என்றால் சொந்த வாழ்க்கையிலும் விவாகரத்து வரை சென்றுள்ளது. இப்போது 150 கோடிக்கு வீடு கட்டினாலும் மனைவி மற்றும் மகன்கள் அங்கு வாழ முடியாமல் உள்ளது.