மோகன்லாலின் அந்த ஹிட் படம் போல் கதை வேணும்.. ரஜினியின் எதிர்பார்ப்பு நடக்குமா.?

என்னதான் சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கினால் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் மூலம் நிரூபனமானது. முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் படங்களும் தோல்வி அடைந்தன.

இதனால் அடுத்தது எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் ரஜினி உறுதியாக உள்ளார். அதனால் ஹிட் இயக்குனரை சல்லடை போட்டு தேடி கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எனக்கு லூசிபர் போன்ற கதை தான் வேண்டும். அப்படி ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என கூறி வருகிறாராம் ரஜினி.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமான படம் தான் லூசிபர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

ஒரு அரசியல்வாதியின் மறைவுக்குப் பின்னர் மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதலை பல டிவிஸ்ட்டுகள் மூலம் மிகவும் சுவாரசியமாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருப்பார் பிருத்விராஜ். இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தற்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் ரீமேக்காகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை போலவும், மோகன்லாலின் கதாபாத்திரம் போலவும் தனக்கு ஒரு படம் வேண்டும் என ரஜினிகாந்த் இயக்குனர்களிடம் கூறியுள்ளார். இந்த புதிய படத்திற்காக இயக்குனர்கள் நெல்சன், வெங்கட் பிரபு போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

லூசிபர் படத்தை போலவே ஒரு கதையை தயார் செய்வதற்கு பதில் அந்த படத்தையே தமிழில் ரீமேக் செய்யாலாமே என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் சொல்வதும் நல்ல ஐடியாவாகத்தான் உள்ளது.