Rajini- Kamal Flop Movies: எண்பதுகளில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் ஜாம்பவான்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும். இவர்களது படங்களை ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
ஆனால் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது போல் முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவிய ரஜினி, கமல் படங்களும் உண்டு. அதிலும் உலகநாயகன் கமலஹாசன் மெனக்கெட்டு நடித்த ஆளவந்தான் திரைப்படம் அவருக்கு படு தோல்வியாக அமைந்தது. இந்த படத்தில் சிறுவயதிலேயே சித்திக் கொடுமையால் அவரை கொலை செய்து விட்டு மன நோயாளியாக காப்பகத்தில் இருக்கக்கூடிய நந்தகுமார் கேரக்டரில் உலக நாயகன் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டினார்.
இதில் அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கட்டிடங்கள், வீடுகள் மூலம் தாவிச் செல்லும் சற்றும் பயமில்லாத நந்து இறுதியில் தன் உயிரை மாய்த்துக் கொள்வது போல் காட்டினர். இந்தப் படத்திற்காக கமல் தன்னுடைய முழு முயற்சி கொடுத்தாலும் ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்காமல் போனது.
இதனால் மோசமான விமர்சனத்தை பெற்று, வசூலில் மண்ணைக் கவ்வியது கமலுக்கு எப்படி ஆளவந்தானோ அதேபோல் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாபா. பொதுவாக ரஜினியை மாஸ் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை சைலண்டாக பார்ப்பதற்கு பிடிக்காமல் போனது.
இதனால் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சியிலேயே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்களை பெற்று பிளாப் ஆனது. இருப்பினும் இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஏனென்றால் இந்த இரண்டு படங்களும் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் ஹைப்பை ஏற்படுத்தியது.
ஆனால் முதல் ஷோவியிலேயே இரண்டு படங்களும் மண்ணை கவ்வியது. இருப்பினும் ரஜினிகாந்த் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல் பாபா படத்தை சமீபத்தில் ரீமிக்ஸ் செய்து பார்த்தார், ஆனால் அப்போதும் அந்த படம் வசூல் என்ற பெயரில் சில லட்சங்களை மட்டுமே ஈட்டியது, சூப்பர் ஸ்டாருக்கு அசிங்கமாய் போய்விட்டது.