விக்ரம் படத்தின் மாஸ் வெற்றி.. இதுவரைக்கும் ரஜினிக்கு வராத பயம்.!

விக்ரம் திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமலைப் பார்த்து பொறாமைப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் நெல்சனை நம்பலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் பீஸ்ட் படத்தை பார்த்ததிலிருந்து உள்ளாராம் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிகாந்த் களமிறங்கி நெல்சன் கூறும் கதைகளில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்து வருகிறார்.

இதற்கெல்லாம் அண்ணாத்த திரைப்படத்தின் தோல்விதான் காரணமாக இருந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கமலஹாசனின் மார்க்கெட் எகிரி உள்ளதால், ரஜினிக்கு சற்று பயம் அதிகரித்துள்ளது. ஏனென்றால் கமலஹாசனும், ரஜினிகாந்தும் ஒரே திரைப்படத்தில் நடிகர்களாக அறிமுகமாகி போட்டி போட்டு பல திரைப்படங்களில் நடித்தவர்கள்.

ஆனால் கமலஹாசன் பல வருடங்களாக பெரிய ஹிட் திரைப்படங்களை கொடுக்காமல் இருந்த நிலையில் ரஜினிகாந்த் தனிக்காட்டு ராஜாவாக கோலிவுட்டை ஆட்டிப்படைத்தார். இந்த நிலையில் மீண்டும் கமலுடன் போட்டிபோடும் நிலைமை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினிகாந்த் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

என்னதான் பொது வாழ்க்கையில் நண்பர்களாக சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் இருந்தாலும் திரைவாழ்க்கை என்று வந்தவுடன் சூப்பர் ஸ்டார் தனது போட்டியை ஆரம்பித்துள்ளார். மேலும் கமலஹாசனும் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள அடுத்தடுத்த திரைப்படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவுடன் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது நெல்சன் நிலை சற்று திணறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இதனிடையே இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்கக வேண்டும்.