கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மேலும் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததும் இவர்தான். ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் அவருடைய சம்பளம் குறைந்து கொண்டே வருகிறது. அவ்வாறு ரஜினியின் கடைசி ஐந்து படங்கள் வாங்கிய சம்பள விவரங்களை தற்போது பார்க்கலாம்.
பேட்ட : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் 2019ல் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்திற்காக ரஜினி 110 கோடி சம்பளம் பெற்றார்.
தர்பார் : ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. இப்படத்தின் திரைக்கதை பலவீனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தர்பார் படத்திற்கு ஜிஎஸ்டியைத் தவிர 100 கோடி சம்பளமாக ரஜினி பெற்றார்.
அண்ணாத்த : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்த படம் அண்ணாத்த. ரஜினி ரசிகர்களுக்காக மட்டுமே இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் அண்ணாத்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்காக ரஜினிக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.
ஜெயிலர் : தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர். இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் சரியாக போகவில்லை என்பதால் இப்படத்திற்கு 80 கோடி மட்டுமே ரஜினிக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.
தலைவர் 170 : சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி ரஜினியின் 170 ஆவது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ரஜினி 75 கோடி மட்டுமே சம்பளம் வாங்க உள்ளாராம்.