Re release films aalavandhan and muthu box office collection: “கடவுள் பாதி! மிருகம் பாதி” என்று வந்த ஆளவந்தானிடம் வசமாக சிக்கிக் சின்னாபின்னமானார் முத்து. 2005 இல் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் சந்திரமுகி உலக நாயகன் கமலின் நடிப்பில் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் மோதிக்கொண்டன. அதன்பின் சமீப காலமாக இருவரின் ரீ ரிலீஸ் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொள்கின்றன.
கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் 1995 வெளிவந்த திரைப்படம் முத்து இந்தியாவின் பல மொழிகளிலும் திரையிடபட்டது. மேலும் ஜப்பானில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமை கொண்டது முத்து. இதில் அரசனாகவும் ஆண்டியாகவும் என வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை கூறி அனைத்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தார் முத்து.
உலகநாயகன் கமல் இரு வேடத்தில் தோன்றி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 இல் வெளிவந்த ஆளவந்தான் உளவியல் ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக அன்றைய காலகட்டத்தில் பல மோஷன் எபெக்ட்ஸ் உடன் விலை உயர்ந்த கேமரா மற்றும் அதிநவீன டெக்னாலஜியுடன் அதிக பொருட் செலவில் உருவான திரைப்படம். ஆனால் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அன்றைய காலகட்டத்தில் ஆளவந்தானின் தயாரிப்பாளரான எஸ் தாணு விற்கு இப்படத்தின் மூலம் பலத்த அடி. கமலின் வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் வெற்றியடைந்ததை அடுத்து தாணுவும் ஆளவந்தானை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டார் இதன்படி ரீ ரிலீஸ் வேலை ஆரம்பித்து விளம்பரமும் செய்யப்பட்டது. இதற்கு போட்டியாக ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி முத்துவும் ரீ ரிலீஸ் செய்ய ஆயத்தமானது.
டிசம்பர் 8 இல் ரீ ரிலீஸ் ஆன முத்து, ஆளவந்தான் இவை இரண்டில் ரசிகர்கள் ஆளவந்தானை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆளவந்தானின் வசூல் 15 லட்சத்தை தொட்ட போது முத்துவின் வசூலோ ஆறு முதல் ஒன்பது லட்சம் வரை இருந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் முத்துவை அடிக்கடி சின்னத்திரையில் பார்த்து பழகி உள்ளனர் ரசிகர்கள். ஆளவந்தான் அப்படி அல்ல.
2கே கிட்ஸ் பலரும் விக்ரமில் பார்த்த கமலின் படம் ஏன் அன்று ஓடவில்லை என்கிற ஆதங்கத்துடனும், கமலின் நடிப்பை காண வேண்டும் என்ற ஆர்வத்துடனும் ஆளவந்தானை எதிர்நோக்கினர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காலங்கள் கடந்து கட்டுக்கோப்பாக நின்றார் ஆளவந்தான்.