ரஜினியும் கமலும் சினிமாவில் வெற்றி பெற இதுதான் காரணம்.. எங்களுக்கு என்டே கிடையாது

தமிழ் சினிமாவின் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக மட்டுமே நடித்துவரும் நடிகர்கள் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் மட்டும் தான். 80 காலகட்டத்தில் இவர்களது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதே சமயத்தில் இவர்கள் திரைப்படங்களை போல பல வெற்றிப்படங்களை கொடுத்த மற்ற நடிகர்கள் தற்போது குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டும் இன்று வரைக்கும் கதாநாயகர்களாக திரைப்படத்தில் நடித்து மக்களை ஈர்த்து வருவதற்கான காரணங்களை குறித்து வெவ்வேறு பேட்டிகளில் இருவரும் தெரிவித்துள்ளனர். இதனிடையே 1975ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதே திரைப்படத்தில் தான் உலக நாயகன் கமல்ஹாசனும் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். அதுவரை குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த கமலஹாசனுக்கு பாலச்சந்தர் இத்திரைப்படத்தின் மூலமாக கமலின் நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். இந்த திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய வெற்றியையும் தேசிய விருதுகளையும் அள்ளி தந்தது. இந்த படத்திற்கு பின்னரே ரஜினியும் கமலும் தனித்தனியாக கதாநாயகர்களாக பல திரைப்படங்களில் நடித்தனர்

சிவாஜி, எம்ஜிஆர் என்று சொல்லும் காலகட்டம் போய், ரஜினி, கமல் என்று சொல்லும் கால கட்டம் வந்தது. 168 திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்தின் மாஸ் வசனங்கள், ஸ்டைலான நடையும், 200 படங்களுக்கும் மேலாக நடித்த கமலின் நவரச நடிப்பும் தான் இன்றளவும் மக்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியிடமும் கமலிடமும் வெவ்வேறு பேட்டிகளில்,உங்களிடம் எந்த மாதிரியான கதையை ஒரு இயக்குனர் சொன்னால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் மாஸ், பஞ்ச் வசனங்கள் அதற்கு அப்பாற்பட்டது தான் விருதுகள் எல்லாம். மேலும் அந்தக் கதை என் மனதிற்கு பிடிக்க வேண்டும் அவ்வளவுதான் அதுதான் என்னுடைய வெற்றி என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வேறொரு பேட்டியில் பேசிய கமல், ஒரு படம் சக்சஸ் ஆகி விட்டால் எல்லா நேரத்திலும் வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியாது. படம் எப்படிப்பட்ட படம் என்னையும் தாண்டி தான் இறந்ததற்கு பின்னாலும் அந்தப் படம் உயிருடன் இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய வெற்றி என தெரிவித்துள்ளார்.

கமலும் ரஜினிகாந்தும் தனித்தனியே திரைப்படங்கள் நடித்தாலும் பொது வாழ்க்கையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தின் தலைவர் 169 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இளம் இயக்குனர்களோடு பயனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.