Parasakthi: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் பராசக்தி உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இடையில் சிறு பிரேக் விடப்பட்டது. அந்த கேப்பில் சிவகார்த்திகேயன் மதராஸி பட வேலையை முடித்து விட்டார். தற்போது பராசக்தி ஷூட்டிங் பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது ரெட் ஜெயன்ட் படத்தை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் என இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது.
பராசக்திக்கு நெருக்கடி கொடுக்கும் ரெட் ஜெயன்ட்
அப்பொழுதுதான் ஜனநாயகன் படத்தோடு மோத முடியும். ஏற்கனவே இந்த செய்தி எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் தற்போது மேலிடத்தில் நெருக்கடி கொடுக்கப்பட்டிருப்பது இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. பராசக்தி ஹிந்தி எதிர்ப்பு பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் இந்த படம் வந்தால் ஆளும் கட்சிக்கு பெரிய பிளஸ் ஆக அமையும்.
அதேபோல் இந்த முறை தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கப் போகிறது. இரு பெரும் கட்சிகளான திமுக அதிமுகவுடன் தமிழக வெற்றிக்கழகம் மோதுகிறது. இப்படி பல விஷயங்கள் இருப்பதால் பராசக்திக்கு நெருக்கடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.