பிரிந்த கணவரை மறக்க முடியாமல் தவிக்கும் சமந்தா.. லண்டனில் அம்பலமான உண்மை!

நடிகை சமந்தா இன்று தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த சமந்தா இன்று தன்னுடைய கடின உழைப்பினால் யாரும் எதிர்பார்க்காத உச்சத்தில் இருக்கிறார். திருமணம், விவாகரத்துக்கு பின்பும் சமந்தாவின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தென்னிந்திய நடிகைகளை பொறுத்த வரைக்கும் திருமணம் ஆகிவிட்டாலே அவர்களுடைய சினிமாக் கேரியர் குளோஸ் ஆகிவிடும். ஆனால் சமந்தா இதற்கு விதிவிலக்காக இருந்தார். பல வெற்றி படங்களில் நடித்தார். எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய காதல் கணவர் நாகை சைத்தான்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பின்பும் சமந்தா ரொம்பவும் மன உறுதியுடன் காணப்பட்டார்.

விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த சமந்தா தனக்கு மயோசைட்டிஸ் என்னும் தோல் அலர்ஜி நோய் இருப்பதாக அறிவித்தார். இதற்காக பல இடங்களிலும் சிகிச்சை பெற்று வரும் இவர் சமீப காலமாக ரொம்பவும் சோர்வுடனே காணப்படுகிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை உண்டாக்கி இருக்கிறது.

இதற்கிடையில் சமீபத்தில் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் இவர் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார் அங்கு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

அந்த புகைப்படங்களில் சமந்தா தன்னுடைய விழா எலும்புகளுக்கு நடுவே போட்டிருக்கும் டாட்டூவும் ரொம்பவே பளிச்சென்று தெரிந்தது. இந்த டாட்டூ சமந்தா தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யா நினைவாக போட்டுக் கொண்டது. விவாகரத்திற்கு பின்பும் சமந்தா இந்த டாட்டூவை அழிக்காமல் இருப்பது அவர் தன்னுடைய காதல் கணவரை இன்னும் மறக்கவில்லை என்பதை குறிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

                                                                                    சமந்தா விலா எலும்பில் போடப்பட்டிருக்கும் டாட்டூ 

விவாகரத்துக்கு பின்பும் சமந்தா எந்த ஒரு இடங்களிலும் தன்னுடைய கணவரைப் பற்றி எந்த ஒரு தப்பான விஷயத்தையும் பேசவில்லை. மேலும் நாக சைதன்யாவுடன் அதன் பிறகு இரண்டு, மூன்று நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள். அதையும் பற்றி பேச மறுத்துவிட்டார் சமந்தா. முன்னாள் கணவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ஜீவனாம்சம் தொகையையும் மறுத்த சமந்தா இன்று வரை ரொம்பவே தைரியமுடன் காணப்பட்டாலும், இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது.