Actress Samantha: தென்னிந்திய நடிகைகளில் திருமணத்திற்கு பின்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்றால் அது நடிகை சமந்தா தான். இவருடைய இந்த வளர்ச்சி பல நடிகைகளுக்கும் கதிகலங்க செய்தது என்று தான் சொல்ல வேண்டும். உடற்பயிற்சி, டயட் என வருடம் ஏற, ஏற சமந்தாவுக்கு வயது குறைந்து கொண்டே வந்தது, வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.
அதே நேரத்தில் சமந்தா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். இனி சமந்தாவின் கேரியர் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரே பாடலின் மூலம் பல மடங்கு உச்சத்திற்கு சென்றார் இவர். தனி கதாநாயகியாக நடித்த படங்களும் ஹீரோக்களுக்கு இணையான வரவேற்பை பெற்றன.
இப்படி வெற்றியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சமந்தாவுக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது தான் மயோசைட்டிஸ் என்னும் தோல் அலர்ஜி நோய். இந்த நோய் தாக்கப்பட்ட பின்னரும் உடற்பயிற்சி மற்றும் திரைப்படங்கள் என்று தன்னைத்தானே பிசியாக வைத்துக் கொண்டிருந்தார் இவர். இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சிகிச்சையின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலைமை தற்போது அவருக்கு வந்துவிட்டது.
எனவே சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் சமந்தா. அதற்கு முன்பாக நிம்மதியைத் தேடி ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது இவர் ஈஷா யோகா மையத்தில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி கொண்டு இருக்கிறது. இவருடைய ரசிகர்களும் இவருக்கு ஆறுதல்களை சொல்லி வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் சமந்தா ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க இருக்கிறார். இந்த ஒரு வருடத்தில் அவர் இழக்கப்போகும் வருமானத்தின் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சமந்தா தற்போது ஒரு படத்திற்கு 3.5 கோடி முதல் 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். ஒரு வருடம் படம் நடிக்காமல் இருப்பதால் சமந்தாவுக்கு 12 கோடி இழப்பு ஏற்படுகிறது என கணிக்கப்பட்டிருக்கிறது.
உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்காத காரணத்தினாலேயே தற்போது சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் பொழுது சமந்தாவுக்கு வரவேற்பு எப்படி இருக்கும், சம்பளங்கள் எப்படி பேசப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.