தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் சமுத்திரகனி இப்போது முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஏற்கனவே அவர் சுப்பிரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் இப்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பெரிய பெரிய இயக்குனர்களிடம் இருந்தெல்லாம் அவருக்கு அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே அவர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இதை அடுத்து அவருடைய கால்ஷூட்டுக்காக பல தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அந்த அளவுக்கு அவர் தற்போது ஒரு முக்கிய நடிகராக மாறி இருக்கிறார்.
மேலும் ஏதாவது ஒரு பெரிய பட்ஜெட் அல்லது பான் இந்தியா திரைப்படம் என்றாலே சமுத்திரகனியை கூப்பிட்டு ஒரு சிறு ரோலாவது கொடுத்து விடுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் இயக்குனர்களின் கவனமும் சமுத்திரகனியின் பக்கம் திரும்பி இருக்கிறது. பல ஹிந்தி படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
பாலிவுட்டில் இருந்து இவருக்கு பெரிய தயாரிப்பாளர்களிடம் இருந்து அழைப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம். அதிலும் சில இயக்குனர்கள் இவரிடம் கதை சொல்வதற்காக காத்திருக்கிறார்களாம். அதனால் விரைவில் நாம் சமுத்திரக்கனியை பாலிவுட் திரைப்படங்களில் பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
மேலும் சமுத்திரகனி தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ராம்சரணனின் தெலுங்கு திரைப்படம் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது அவர் தான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்து விட்டார் என்று தான் தோன்றுகிறது.