Santhanam-Simbu: சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் மே 16 வெளியாகிறது. அதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் சிம்பு, ஆர்யா கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது மேடையில் பேசிய சந்தானம் சிம்பு இல்லனா இன்னைக்கு நான் கிடையாது என மனம் திறந்து கூறினார்.
மன்மதன் படத்தில் எனக்கு அவர் வாய்ப்பு தரவில்லை என்றால் இப்போது நான் இல்லை. அதிலும் அந்த படத்தில் என் அறிமுக காட்சியே பில்டப் போல் இருக்கும்.
சந்தானம் சொன்ன ஃபிளாஷ்பேக்
அப்போ இருந்து இப்போது STR 49 வரைக்கும் சிம்பு, படத்தில் எனக்கான முக்கியத்துவத்தை பற்றி பார்க்கிறார். இப்படம் பற்றிய டிஸ்கஷனில் கூட சாண்டாவுக்கு ஸ்பேஸ் இருக்கிற மாதிரி பாருங்க என்று தான் சொன்னார்.
ஐ லவ் யூ சார் என சிரித்துக் கொண்டே கூறினார். ஏற்கனவே சிம்பு கூப்பிட்டால் நான் எப்படி நோ சொல்ல முடியும் என்று கூறியிருந்தார்.
ஏனென்றால் ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு மற்ற ஹீரோக்கள் படங்களில் சந்தானம் நடிப்பதில்லை.
அந்தக் கொள்கையை உடைத்து விட்டு சிம்புவுக்காக அவர் வந்தது ஆச்சரியமாக இருந்தது அதற்கான காரணத்தை தற்போது அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.