அடுத்தடுத்து பிளாப்பாகும் சந்தானத்தின் படங்கள்.. சிவாஜி, கமல் ரேஞ்சுக்கு எடுக்கும் புது அவதாரம்

ஒரு காலகட்டத்தில் சந்தானம் காமெடியில் கலக்கி வந்தார். யாரோ ஒருவரின் பேச்சை கேட்டுக் கொண்டு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தார். அதேபோல் அவர் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த படங்கள் ஓரளவு வெற்றியை பெற்றது.

ஆனால் தற்போது அவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்த குளு குளு படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால் மிகுந்த அப்செட்டில் இருந்துள்ளார் சந்தானம்.

இந்நிலையில் ஷங்கரின் உதவி இயக்குனர் கோவர்தன் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். படத்தின் கதையை கேட்ட சந்தானத்திற்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். உடனே படத்திற்கு ஓகே சொல்லிவிட கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.

இப்படத்தின் கதை காமெடி மற்றும் ஃபேன்டஸி கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சந்தானம் இப்படத்தில் 7 கெட்டப் போடப் இருக்கிறாராம். இப்படத்தின் மூலம் சந்தானம் முதல் முறையாக பல கெட்டப்புகளில் போட உள்ளார்.

சிவாஜியின் நவராத்திரி, கமலின் தசாவதாரம் படங்களை போல பல கெட்டப்பில் சந்தானம் அசத்தவுள்ளார். தற்போது விக்ரம் கோப்ரா படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் நாமும் பல கெட்டப்பில் நடிக்கலாம் என்ற யோசனை சந்தானத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தை டிரைட்ண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படம் சந்தானத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.