வருகிறது சயின்ஸ் படத்தின் 2ஆம் பாகம்.. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

பொதுவாகவே தமிழ் சினிமாவில் சயின்ஸ் படங்கள் என்றால் அதுக்கு ஒரு தனி கிரேஸ் உண்டு. அந்த வகையில் இன்று வரை பல சயின்ஸ் படங்கள் தமிழில் ஹிட் அடித்து உள்ளது. சயின்ஸ் படங்கள் எடுக்க வேண்டுமென்றால் அதற்காக தத்ரூபமான பல காட்சிகளை உருவாக்க வேண்டும்.

நியூ, ஏழாம் அறிவு, இரண்டாம் உலகம், 24 போன்ற சயன்ஸ் படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலேயும் சயின்ஸ் கலந்த காமெடி படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடையும்.

அப்படி சயின்ஸ் மற்றும் காமெடி கலந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அந்த படத்தின் இயக்குனர். இப்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படத்தில் கொஞ்சம் பிசியாக இருக்கிறார்.

இயக்குனர் ரவிக்குமாருக்கு வாழ்க்கை கொடுத்த படம்” இன்று நேற்று நாளை”. இந்த படம் 2015ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இது ஒரு டைம் டிராவல் படம். இந்தப்படத்தை அவ்வளவு தத்துரூபமாக எடுத்து அசத்தியிருப்பார் டைரக்டர் ரவிக்குமார்.

இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்ட் முழுவதும் எழுதி விட்டாராம். சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருவதால் நேரம் கிடைக்கவில்லையாம். அதனால் கூடிய விரைவில் “இன்று நேற்று நாளை” படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்கலாம்.

மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்காக இதை நான் பண்ணியே ஆக வேண்டும். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பாளர் என்று பெருமிதமாகச் சொல்கிறார் ரவிக்குமார். ஆனால் முதலாம் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால் இதில் நடிப்பாரா என்பது சந்தேகம் தான். அவருக்குப் பதில் சந்தீப் கிஷன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.