விஜய் நிராகரித்ததால் ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு.. தளபதி போல் இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம்

Shahrukh Khan-Vijay: விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ அதே போல் தான் பாலிவுட்டில் ஷாருக்கான். இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சினிமாவில் கிங்காக இருக்கும் இவர்கள் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் விஜய், ஷாருக்கான் இருவருமே நடனமும் நன்றாக ஆடக்கூடியவர்கள். இந்நிலையில் விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லி ஷாருக்கானுக்கு ஜவான் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

இந்த படம் இப்போது வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் ஜவான் படத்திற்கு முன்னதாகவே விஜய்யின் இயக்குனரான முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அட்லி படத்தில் இவர் நடித்து வந்த நிலையில் ஜவான் படமே நான்கு ஐந்து வருடங்கள் இழத்துவிட்டது.

அதன் பிறகு ஷாருக்கான் மற்றும் முருகதாஸ் கூட்டணி இணையாமல் போய்விட்டது. இதற்கு காரணம் ஷாருக்கான் முருகதாஸ் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். அதாவது விஜய்யின் முக்கியமான படமான துப்பாக்கி படத்தை கொடுத்தவர் முருகதாஸ். அடுத்ததாக விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் கத்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

மேலும் கடைசியாக இவர்களது கூட்டணியில் வெளியான சர்கார் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. அதன் பிறகு விஜய், முருகதாஸ் கூட்டணியில் பீஸ்ட் படத்திற்கு முன்னதாகவே ஒரு படம் உருவாகுவதாக தகவல் வெளியான நிலையில் தளபதி இதை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்தக் கதை வேறு படத்தின் சாயலில் இருப்பதாகவும் தனக்கு பிடிக்கவில்லை என்று விஜய் மறுத்துவிட்டார். இப்போது விஜய் மறுத்ததால் ஷாருக்கானும் முருகதாஸ் படத்தை மறுத்துவிட்டார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது.