3 தரமான இயக்குனர்களை களமிறக்கும் ஷங்கர்.. கமலால் வந்த பிரச்சனையை சமாளிக்க இப்படி ஒரு திட்டம்

ஷங்கர் தற்போது பல நாட்களாக கிடப்பில் போட்ட இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இப்போது சென்னையில் பிரமாண்ட செட் போட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை விரைந்து முடிக்க ஷங்கரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் படத்தையும் இயக்கி வருவதால், இரண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொள்வது மிகவும் கஷ்டமாக உள்ளது.

அதுமட்டுமின்றி கமலஹாசன் தற்போது மாதம் 10 நாட்கள் மட்டுமே இந்தியன் 2 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். ஏனென்றால் கமல் மற்ற பட வேலைகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் தற்போது பிசியாக உள்ளார். இதனால் ஷங்கர் தற்போது முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

அதாவது இந்தியன் 2 படத்திற்காக மூன்று இயக்குனர்களை இந்த ப்ராஜெக்ட்டில் சேர்த்துள்ளார் ஷங்கர். சிம்பு தேவன், அறிவழகன், வசந்தபாலன் ஆகியோரை தனது படத்தில் ஷங்கர் தேர்வு செய்துள்ளார். சிம்பு தேவன் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இயக்குனர் அறிவழகன் ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கியிருந்தார். மேலும் வெயில், அரவான், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். இந்த மூன்று திறமையான இயக்குனர்களையும் இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் அழைத்துள்ளார்.

மேலும் கமல் கொடுத்துள்ள பத்து நாள் கால்சூட்டில் அவருடைய படப்பிடிப்பை மட்டும் ஷங்கர் எடுக்க உள்ளார். மற்றவற்றையெல்லாம் இந்த மூன்று இயக்குனர்கள் பார்வையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. கமல் மற்றும் ஷங்கர் இருவருமே மிகவும் பிசியாக இருப்பதால் இந்த முடிவை ஷங்கர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.