Actor Sivaji: 70,80ல் தமிழ் சினிமாவில் நடிப்பை மொத்தமாக குத்தகை எடுத்து அசத்தியவர் தான் சிவாஜி கணேசன். பொதுவாக இவருடைய படங்களில் நடிப்பையும் தாண்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அதற்கு உயிரூட்டி இருப்பார். இவர் நடித்த படங்கள் இந்த தலைமுறையிலும் பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக சாதனை படித்தவர்களை பற்றி எத்தனை காலங்கள் ஆனாலும் பேசப்பட்டு வரும்.
அந்த வகையில் இவர் நடித்த ஒரு படத்தை மறுபடியும் பார்ப்பதற்கு மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அப்போதைய திரையரங்குகளில் படத்தை பார்ப்பதற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
சமீப காலமாக சினிமாவில் ரீ ரிலீஸ் செய்யும் வழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் கமல் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் சிவாஜி நடித்த படத்தை நாளை அவருடைய நினைவு தினத்தன்று ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.
ஏற்கனவே இந்த மாதிரி படங்களை மறுபடியும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு தற்போது லேட்டஸ்ட் டிஜிட்டல் முறையில் பார்ப்பதற்கு வாய்ப்பு எட்டியுள்ளது. ஆனால் இந்த படம் ஏற்கனவே இரண்டாவது முறையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனையை படைத்தது.
தற்போது மூன்றாவது முறையாக நாளை ரீ ரிலீஸ் செய்யப் போகும் படம் 1972-இல் வெளிவந்த வசந்த மாளிகை. இப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று கிட்டத்தட்ட 750 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.
அத்துடன் இரண்டாவது முறையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 100 நாட்கள் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
மேலும் நாளை இந்த படம் ரிலீஸ் ஆகும் போது திரையரங்குகளில் மக்கள் அலைமோதி கொண்டு பார்த்து மகிழ்வார்கள். அத்துடன் இவருடைய நடிப்புக்கும் இந்த படத்திற்கும் போட்டியாக யாராலயும் கிட்ட நெருங்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சிவாஜி இல்லை என்றாலும் அவர் கொடுத்துட்டு போன பொக்கிஷங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.