Actor Siddharth: தனக்கான கதாபாத்திரங்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் தனக்கான ஒரு தரமான வெற்றியை பதிவு செய்வதில் இன்னும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகனுடன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய ஒரு படம் கலாச்சார சீகேட்டை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு மேடையில் கொந்தளித்து போய் பேசி இருக்கிறார். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டக்கர். யோகி பாபு, திவ்யன்ஷா கௌஷிக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ரொமான்டிக் கலந்த ஆக்சன் படமாக வெளிவந்த இப்படத்தில் முதல் பாதி காட்சியே மிகவும் அருவருப்பாகவும் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாகவும் ராஜன் குறிப்பிட்டுள்ளார். அதனாலயே படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே நான் ஓடி வந்து விட்டேன்.
ஏனென்றால் அந்த படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஹீரோ சிகரெட் பிடிப்பது போன்று இருந்தது. சிறிது நேரத்திலேயே ஹீரோயினும் ஹீரோவுக்கு இணையாக சிகரெட் பிடிப்பது போன்று காட்டி இருந்தார்கள். அதே போன்று ஹீரோயின் படத்தில் சரக்கும் அடிக்கிறார். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது என ராஜன் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.
மேலும் இப்போதெல்லாம் திரைப்படங்களில் ஆண்கள் மது அருந்தினாலே அது படம் பார்க்கும் இளைய தலைமுறையை பாதிக்கும் என்று கூறுகிறோம். அப்படி இருக்கும்போது பெண்கள் இப்படி செய்தால் நன்றாகவா இருக்கிறது. இதனால் நம் கலாச்சாரம் சீரழிந்து போகிறது என்று கோபத்துடன் பேசினார்.
தற்போது ராஜன் பேசிய இந்த கருத்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயல்பாகவே அவர் ஏதாவது மேடையில் பேசினால் அதை பலரும் கேலி கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு தான் அவருடைய பேச்சு இருக்கும். ஆனால் முதல் முறையாக அவர் நியாயமான ஒரு விஷயத்தை எடுத்து பேசி இருந்தது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதே போன்று சமூகப் பொறுப்போடு அடிக்கடி பேசும் சித்தார்த் இதுபோன்ற படங்களில் நடித்து கலாச்சார சீரழிவுக்கு துணை போகலாமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.