KGF யாஷ் போல மரண மாஸாக இருக்கும் சிம்பு.. பத்து தல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

சிம்பு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட  சிம்பு இயக்கம் பாடகர் நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கி வருகிறார். மேலும் ஆல்பம் பாடல்களும் பாடி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

சிம்பு உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக அவரது நடிப்பில் வெளியான சில படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தன. அதன் பிறகு சிம்புவின் நடவடிக்கைகளும் சரியில்லாத காரணத்தால் பலரும் பல்வேறு விதமாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் மாநாடு என்ற ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த சிம்பு அதன் பிறகுஇதுவரைக்கும் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். அதாவது சிம்பு கிராமத்து பயனாக அதிகமாக நடித்ததில்லை மேலும் சிம்புவுக்கு கிராமத்துப் பையன் கெட்ட சரிவராது என பலரும் விமர்சித்தனர்.

ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தில் கிராமத்து பையனாக நடித்து வெற்றி பெற்றார். அதில் சிம்புவின் தனிப்பட்ட ஸ்டைல் எதுவும் காட்டப்படாமல் முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாகவே நடித்திருந்தார். இதனைப் பார்த்த பலரும் சிம்புவின் நடிப்பை வெகுவாக பாராட்டினர்.

simbu
simbu

தற்போது சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிம்பு நடித்து வரும் பத்து தல திரைப்படம் சில மாதங்களாக படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தனர்.

simbu
simbu

ஆனால் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் படத்தினுடைய அப்டேட்டும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

simbu
simbu