Actor Simbu: தன் ரீ என்ட்ரி படங்களின் மூலம் வெற்றி கொண்டாடும் சிம்பு தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தன் படங்கள் இவ்வாறு தான் அமைய வேண்டும் என்ற பிளானில் உறுதியாக உள்ளாராம். அதைப் பற்றிய தகவலை இங்கு காண்போம்.
சிம்புவின் ரீ என்ட்ரி ஆன வெந்து தணிந்த காடு படத்திற்கு பிறகு இவர் மேற்கொண்ட மாநாடு மற்றும் பத்து தல போன்ற படங்கள் இவருக்கு தொடர்பு வெற்றியை தேடி தந்தது. அதிலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மாநாடு படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
அதன்பின் தொடர்ந்து திரில்லர் மற்றும் ஆக்சன் படங்களில் களம் இறங்கிய இவர் தற்பொழுது தன் மாநாடு படத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டு திரில்லர் கதைகளுக்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். மேலும் தன் நடிப்பில் எப்பேர்பட்ட கதையாக இருந்தாலும், அதில் கொஞ்சம் திரில்லராக எடுத்தால் அது நிச்சயமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஆகையால் திரில்லர் கதை பண்ணலாம் என்பதற்காக ஒரு சூப்பர் ஹிட் பட இயக்குனரை தேடி வருகிறாராம். அதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்த படம் தான் போர் தொழில்.
அவ்வாறு விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்ததன் பெயரில், ஏன் தன் அடுத்த படத்தை இவரை வைத்து பண்ண கூடாது என்ற முடிவில் இருந்து வருகிறாராம் சிம்பு.
அவ்வாறு தன் இயக்கத்தில் ஆச்சரியத்தை உண்டு படுத்திய இயக்குனரான விக்னேஷ் ராஜாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் சிம்பு. ஆகையால் இதைத் தொடர்ந்து சிம்பு, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கண்டிப்பாக ஒரு படம் கைகூடும் என்பது உறுதியாகியுள்ளது.