சிம்பு, தனுஷ் போல் அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. எது எப்படியோ, நூர்ஜகான் காட்டில் கொட்டும் அடைமழை

மாளவிகா மோகன், சம்யுக்தா, பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா லட்சுமி இவர்களெல்லாம் பழைய ஹீரோயின்கள் லிஸ்டில் சேர்ந்து விட்டனர். இப்பொழுது சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் புது ஹீரோயின்களை குறிவைத்து வருகிறார்கள்.அதிலும் ஒரு ஹீரோயினுக்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் தான் வேண்டுமென்று அடம் பிடித்தார். இப்பொழுதுஅந்த இடத்தை வேறு ஒரு புது ஹீரோயின் பிடித்து விட்டார். அவரைத்தான் சிம்புவும், தனுஷும் தங்களது படத்திற்கு கமிட் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாக மம்தா பஜுலு, கையாடு லோகர் தமிழில் கொடி கட்டி பறந்து வருகிறார்கள். இருவரும் தங்களது கையில் அரை டசன் படங்கள் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே சிம்பு அடுத்தடுத்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க உள்ளார். அதற்காக இப்பொழுது ஹீரோயின்களையும் தேடி வருகிறார்.

சிம்பு நடிக்க போகும் 49 வதுபடத்திற்கு கையாடு லோகர் தான் வேணும் என அடம்பிடித்து புக் செய்துள்ளார். இப்பொழுது அவருக்கு போட்டியாக மற்றும் ஒரு ஹீரோயின் வந்துள்ளார். தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் அந்த ஹீரோயின் தான் வேண்டும் என தூது அனுப்புகிறார்கள்.

சீதாராம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தவர் மிர்னால் தாக்கூர். அதில் இவர் ஏற்று நடித்திருந்த பிரின்சஸ் நூர்ஜகான் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதிலிருந்து இளம் ஹீரோக்கள் மனதை சுண்டி இழுத்துள்ளார். சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்கரவர்த்தி படங்களில் நடிக்க உள்ளார். இதில் வெங்கட் பிரபு படத்திற்கு மிர்னால் தாக்கூர் தான் வேணும் என தூது அனுப்பியுள்ளார்.