18 ஆண்டுகளுக்கு பின் மோதவிருக்கும் சிம்பு-தனுஷ்.. எதிர்பார்ப்பை கிளப்பிய பெரிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருவரின் ரசிகர்களுக்கிடையே எப்படி போட்டி நிலவுமோ அதேபோன்று ஆரம்பகாலத்தில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் போட்டி நடிகர்களாகவே கருதப்பட்டார்கள். ஒருகட்டத்தில் சிம்புவின் மார்க்கெட் பின் தங்கியதால் தனுஷ் சிம்புவை ஓவர்டேக் செய்த அசுர வளர்ச்சி அடைந்தார்.

தற்போது தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என வேற ரேஞ்சுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மாநாடு படத்திற்குப் பின் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திய சிம்பு, மீண்டும் தனுஷுடன் மறுபடியும் போட்டிக்கு தயாராகி இருக்கிறார். அதற்கு ஒத்திகையாக இருவரின் திரைப்படமும் தற்போது ஒரே நாளில் திரையிடப்பட உள்ளது.

அதாவது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதே நாளில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் திரைக்கு வருகிறது.

ஆகையால் தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையிட்டு தங்களுக்குள் இருக்கும் போட்டியை அதிகப்படுத்துகின்றனர். இதேபோன்று இருவர் படத்தையும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் தனுஷ் நடிப்பில் வெளியான ட்ரீம்ஸ் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் ஆகிய இரண்டு படங்களும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் இப்பொழுதுதான் ரிலீசாக இருக்கிறது.

எனவே ஒரே நாளில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரின் படமும் வெளியாவதால் நிச்சயம் அன்றைய தினத்தில் சோஷியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு பரபரப்பிற்கு பஞ்சமில்லாத சூழல் நிலவை போகிறது.