Actor Simbu: கவுண்டர் வசனங்கள் மூலம் பட்டையை கிளப்பும் கவுண்டமணி நிஜ வாழ்க்கையில் கூட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற ரகம் தான். அப்படித்தான் சிம்புவிடம் இவர் ஒரு விஷயத்தில் கராராக இருந்திருக்கிறார். அதற்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் வேற லெவலில் இருக்கிறது.
அதாவது மன்மதன் படத்தில் சந்தானம் நடித்த போது கவுண்டமணி அவரை பார்த்து கடுப்பாகி இருக்கிறார். மேலும் சிம்புவிடம் ஏன் இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுக்கிற என்று கோபமாக பேசியிருக்கிறார். ஏனென்றால் சந்தானம் லொள்ளு சபா மூலம் பல படங்களை கிண்டல் செய்திருக்கிறார்.
இதை சிலர் ஜாலியாக எடுத்துக் கொண்டாலும் பல பிரபலங்கள் கடுப்பில் தான் இருந்திருக்கின்றனர். அப்படித்தான் கவுண்டமணியும் சினிமாவை கலாய்த்த சந்தானம் சினிமாவிற்குள் எப்படி வரலாம் என்று கோபப்பட்டு இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து சிம்புவிடம் அவர் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கண்டிஷனாக சொல்லியிருக்கிறார். ஆனால் சிம்பு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிலுக்கு அவர் செய்த விஷயம் தான் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.
அதாவது அவர் மன்மதன் படத்தில் கவுண்டமணி நடித்த காட்சிகளை குறைத்துவிட்டு சந்தானத்தின் காட்சிகளை குறைக்காமல் அப்படியே விட்டு இருக்கிறார். இதைப் பார்த்து காண்டான நக்கல் மன்னன் நீங்க எல்லாம் உருப்படவே மாட்டீங்க என்று திட்டி தீர்த்தாராம்.
இந்த விஷயத்தை தற்போது லொள்ளு சபாவில் சந்தானத்துடன் இணைந்து நடித்த சுவாமிநாதன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் சிம்பு பெரிய நடிகரான கவுண்டமணியின் பேச்சை கூட கேட்காமல் சந்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறார். அந்த வகையில் நக்கல் மன்னனுக்கு இவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.