தனுஷ்,Sk அளவுக்கு சம்பளம் வேண்டுமா.? சிம்புவை வாரும் கூட்டம்

Simbu : சிம்பு இப்போது தான் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் நெகடிவ் விமர்சனத்தை பெற்றது. தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது இடையே 10 கிலோ குறைத்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் படத்தின் லாபத்தில் ஷேர் கேட்டு இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். அதன் பிறகு படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தில் திடீரென சம்பளம் கேட்டு இருக்கிறார். அதுவும் இந்தப் படத்திற்கு 45 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. அதாவது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்றோர் இப்போது படத்திற்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அகையால் சிம்புவும் தனது சம்பளத்தை இவ்வாறு உயர்த்தி இருக்கிறார்.

சம்பளத்தை உயர்த்திய சிம்பு

இதனால் நெட்டிசன்கள் பலரும் சிம்புவை கலாய்த்து பதிவு போட்டு வருகிறார்கள். அதாவது அந்த நடிகர்களின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் சம்பளம் அதிகமாக கேட்டு வருகிறார்கள்.

அதுவும் வருஷத்திற்கு இரண்டாம் மூன்று படங்களாவது கொடுத்து விடுகிறார்கள். ஆனால் சிம்புவின் முந்தைய படம் தோல்வியை தழுவியது. அதுவும் சில வருடங்களாக படங்களே நடிக்காமல் இருந்த சிம்பு இப்போது தான் ஃபுல் ஃபார்மில் இறங்கி இருக்கிறார்.

அதற்குள் ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தினால் எப்படி என்று சரமாரியாக கேட்டு வருகிறார்கள். மேலும் திடீரென சிம்பு சம்பளத்தை உயர்த்தியதால் அவர் கேட்ட தொகையை வெற்றிமாறன் படக்குழு தரப்பிலிருந்து கொடுக்க சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.