சிம்புக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. விரைவில் கெட்டி மேளம் கொட்ட போகும் டிஆர்

Simbu : சிம்புவுக்கு சினிமா என்பது மிகச் சின்ன வயதிலேயே கிடைத்து விட்டது. பல நடிகர்கள் போராடி சினிமா வாய்ப்பு வாங்கி வரும் நிலையில் தனது அப்பா டி ராஜேந்தர் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் தனது மகனை குழந்தையாக இருக்கும்போது சினிமாவுக்குள் கொண்டு வந்து விட்டார்.

இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிம்பு ஒரு காலத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின்பு சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வர அவரது பெயர் டேமேஜ் ஆனது. இந்நிலையில் தனது தொழிலை சிறு வயதிலேயே தொடங்கினாலும், 40 வயதாகியும் இப்போது வரை திருமணம் ஆகாமல் இருக்கிறார்.

சிம்புவின் வாழ்க்கையில் பல காதல் தோல்விகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அவரின் தம்பி குறளரசனுக்கு 2019 ஆம் ஆண்டு நபீலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சிம்பு பெரியப்பா ஆகியுள்ளார்.

மேலும் ஏற்கனவே டிஆரின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால் விரைவில் சிம்புக்கு திருமணம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதுவும் வரலட்சுமி உடன் சிம்புவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் ஏற்கனவே போடா போடி என்ற படத்தில் நடித்து இருந்தனர்.

இந்த சூழலில் விஷால் மற்றும் வரலட்சுமி இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த சூழலில் சர்கார் பட விழாவில் பங்கு பெற்ற வரலட்சுமி இடம் கில் மற்றும் கிஸ் யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு விஷாலுக்கு கில் மற்றும் சிம்புக்கு கிஸ் கொடுக்கலாம் என்று வரலட்சுமி கூறியிருந்தார்.

இந்நிலையில் சிம்பு மற்றும் வரலட்சுமி இருவருக்குமே திருமணம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு சிம்பு குடும்பத்தினர் இருக்கின்றனராம். ராதிகா மற்றும் சரத்குமார் இடம் டிஆர் இதுகுறித்து பேச இருப்பதாக வித்தகன் கூறியுள்ளார். இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சிம்பு குடும்பத்திடமிருந்து அறிவிப்பு வெளியானால் தான் தெரியவரும்.