தைரியம் இல்லாமல் போன சிம்பு.. எஸ் ஜே சூர்யாவால் பறிபோன பட வாய்ப்பு

Actor Simbu: நடிகர் சிம்பு பத்து தல திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தன்னுடைய 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படம் சம்பந்தப்பட்ட ஒரு சில பயிற்சிகளுக்காக சிம்பு வெளிநாடு சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிம்பு வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு அடுத்தடுத்து எல்லா படங்களுமே வெற்றி வாகை சூடி வருகின்றன. மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் சிம்புவின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய மைல்கல்கள் என்று தான் சொல்ல வேண்டும். இனி சிம்பு சினிமாவில் நிலைத்து நின்று விடுவார், அடுத்தடுத்த அவருக்கு வெற்றி தான் என்று அவருடைய ரசிகர்களும் மற்றும் குடும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாகத்தான் கொரோனா குமார் படத்தின் பஞ்சாயத்து திடீரென்று கிளம்பி இருக்கிறது. சிம்பு இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு ஒரு வாரம் படப்பிடிப்பிற்கும் சென்றதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன் பின்னர் பட குழு உடன் ஏற்பட்ட முன்னுக்கு பின்னான முரண்பாடு காரணமாக சிம்பு எந்த அறிவுக்குமில்லாமல் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.

சிம்பு இந்த படத்திலிருந்து விலகியதற்கு மிக முக்கிய காரணமே நடிகர் எஸ் ஜே சூர்யா தான் என்கிறார்கள். சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எஸ் ஜே சூர்யாஒரு முக்கிய காரணம் என அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது கொரோனா குமார் திரைப்படம் சிம்பு விலகிப் போனதற்கும் இவர் தான் காரணமாம்.

கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவுக்கு சரிசமமான ஒரு கேரக்டர் இருக்கிறதாம் . இந்த கேரக்டரில் எஸ் ஜே சூர்யா தான் நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் மிகப்பெரிய ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் படத்தின் இயக்குனர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். மேலும் அந்த கேரக்டரில் தானே நடிக்க இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இவர் நடித்தால் கண்டிப்பாக அந்த கேரக்டருக்கு வெயிட் இருக்காது என சிம்பு நினைத்து இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

நடிகர்களை பொருத்தவரைக்கும் தங்கள் உடன் யார் நடித்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும். தனக்காக தான் இந்த படம் ஓட வேண்டும் எனவும் நினைத்து நடிக்க வேண்டும். ஆனால் சிம்பு இப்படி எஸ் ஜே சூர்யாவை சார்ந்து இருப்பது, ஒரு வேளை அவர் மீதான நம்பிக்கை அவருக்கே குறைந்து விட்டதோ என்ற எண்ணத்தை வரவழைத்து இருக்கிறது.