ஐசரி மகள் திருமணத்திற்கு வராத சிம்பு.. இதுதான் காரணமா.?

Simbu : சிம்பு தற்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி ரஜினி, கமல், ஜெயம் ரவி, சிம்ரன், மீனா, பிரதீப் ரங்கநாதன் என பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளாதது இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதாவது வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது.

ஐசரி மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாத சிம்பு

ஆனால் சிம்பு இந்த படத்துடன் தொடர்ந்து மூன்று படங்கள் வேல்ஸ் நிறுவனத்திற்கு நடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருந்தாராம். அதில் ஒன்றுதான் கொரோனா குமார். ஆனால் சில காரணங்களினால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதற்கான அட்வான்ஸ் தொகை சிம்பு வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுக்கவில்லை என ஐசரி கணேஷ் குற்றம் சாட்டினார். அதோடு மட்டுமல்லாமல் சிம்பு ரெக் கார்ட் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் பிறகு இது எங்களுக்குள் நடக்கும் பிரச்சனையை சரியாகிவிடும் என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழலில் சிம்புவின் வீட்டுக்கு நேரில் சென்று ஐசரி திருமண அழைப்பிதழை வைத்திருக்கிறார். ஆனால் சிம்பு பழசை மனதில் வைத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் தனது தந்தை டி ராஜேந்தரை அனுப்பி வைத்தார் என்று கூறப்படுகிறது.