உண்மையைப் பேசி பரஸ்பரமாய் பிரிந்த சிம்பு.. முற்றிலும் கோணலடையச் செய்த முதல் கோணல்

சிம்புக்கான டிமாண்ட் இங்கே இருந்த போதிலும் அவரால் முற்றிலும் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வரிசையாக மூன்று படங்கள் கமிட்டான போதிலும் கூட அவரால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் திணறுகிறார். இப்பொழுது மீண்டும் முதலில் இருந்து காய் நகர்த்த உள்ளார்.

STR 48,49,51 என மூன்று படங்கள் அடுத்தடுத்து நடிப்பதாக இருந்தார். இதற்கு உண்டான இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்தார். இதில் 50வது படத்தை மற்றும் அவரே இயக்கப் போவதாகவும் ஒரு ஒரு முடிவில் இருந்தார். ஆனால் எதற்குமே இப்பொழுது அவர் பக்கம் காற்று வீசுவதாக தெரியவில்லை.

முதல் கட்டமாக தேசிங்கு பெரியசாமி உடன் ஒரு படம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது. ஆனால் அதன் பட்ஜெட் 150 கோடிகள் என்றதுமே நிறைய தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டார்கள். குறிப்பாக ஏஜிஎஸ் மற்றும் கலைப்புலி எஸ் தானு ஆரம்பத்திலேயே இதற்கு தடை போட்டு விட்டனர். இப்பொழுது முற்றிலும் கோணலாய் அமைந்தது.

இதற்கு முழு காரணம் சமீபகாலமாக சிம்புவிற்கு எந்த படமும் கை கொடுக்காததன் விளைவுதான். 2021முதல் 2025 வரை ஆறு படங்கள் மட்டும் நடித்திருக்கிறார். அதில் மாநாடு படம் மட்டும் தான் கை கொடுத்துள்ளது அதுவும் நான்கு வருடத்திற்கு முன்பு.

கமல் மற்றும் சிம்பு இருவரும் சேர்ந்து நடித்த மணிரத்தினத்தின் தக்லைப் படமும் படுதோல்வி அடைந்தது. இதனால் தேசிங்கு பெரிய சாமியிடம் நான் இரண்டு படங்கள் சக்சஸ் கொடுத்துவிட்டு வருகிறேன். அதனால் இந்த படம் இப்போதைக்கு வேண்டாம் நீங்கள் வேறுபடம் பண்ணுங்கள் என பரஸ்பரமாக கூறிவிட்டாராம்.