மாநாடு சக்ஸஸ் பார்ட்டியில் நடந்த பஞ்சாயத்து.. சிம்பு எஸ்கேப் ஆக இதான் காரணம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மாநாடு படத்தில் படப்பிடிப்பின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் ஒத்துப்போகவில்லை. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்குள் பிரச்சனை இருந்தது. அதன்பிறகு ஓரளவு சமாதானம் செய்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது.

ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு மாநாடு படம் நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நவம்பர் 24ஆம் தேதி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் நாளை வெளியாகாது என அறிவித்தார்.

அதன் பின்பு தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நவம்பர் 25ஆம் தேதி மாநாடு படம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. சமீபத்தில் மாநாடு படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த விழா மேடையிலேயே இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என சிம்புவை தாக்கி பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மாநாடு வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொள்ளாதது தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு தான் காரணம் என தெளிவாக தெரிந்தது. இன்றுவரை சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்ன என்று விரைவில் வெளிப்படையாக தெரியும் என எதிர்பார்க்கலாம்.