சிம்புவை அரன் போல் காக்கும் கூட்டணி… பொல்லாப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து மணிரத்தினம் லைக்காக்கு போட்ட கண்டிஷன்

சிம்பு பழைய பொல்லாப்புக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். தற்சமயம் தக்லைப் ப்ரோமோஷன் விழாவில் பேசி வரும் அவர் பல உண்மைகளை உரக்கச் சொல்லி உள்ளார். அவர் மீது போடப்பட்ட பழைய பலிகளுக்கெல்லாம் விடை கொடுத்துள்ளார். வருகிற ஜூன் 5ஆம் தேதி தக்லைஃப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்

டைரக்டர்களே சூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டா தான் வருகிறார்கள், அங்கே வந்து தான் அடுத்த காட்சி என்ன என்பதை கூட யோசிக்கிறார்கள், இப்படி மிகவும் தாமதமாக ஆரம்பிக்கும் ஷூட்டிங்கிற்கு நான் லேட்டா வந்தால் மட்டும் தப்பா என சிம்பு பேசி தன் மீது உள்ள நியாயத்தை கூறியிருந்தார்.

ஆனால் இப்பொழுது மணிரத்தினம் படத்திற்கு காலையில் ஐந்து மணிக்கு எல்லாம் ரெடியாகி சூட்டிங் ஸ்பாட்டிற்கு போய்விடுவாராம். இயக்குனர் மணிரத்தினமும் ஐந்தரை மணிக்கெல்லாம் ஸ்பாட்டிற்கு வந்து சூட்டிங்கை ஆரம்பித்து விடுவாராம். இந்த படத்தில் என்னோட டெடிகேஷன் வேறு என்றும் கூறியிருந்தார் சிம்பு.

இப்பொழுது தக்லைப் படத்திற்கு பிறகு மணிரத்னம் மற்றும் சிம்பு கூட்டணியில் வேறு ஒரு படமும் உருவாகப் போகிறதாம். இதை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே கஷ்டகாலத்தில் இருக்கும் லைக்கா இப்பொழுது புதிதாக மகாவீர் ஜெயந்த் என்னும் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி போட்டு இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

மேலும் இந்த படம் குறுகிய கால படம் என்றும். இதற்கு 100 கோடிகள் பட்ஜெட்எனவும் லைக்காவிடம் கூறியுள்ளார் மணிரத்தினம். சிம்புவின் சம்பளம் போக இந்த படத்திற்கு இவ்வளவு தொகைகள் வேண்டும் எனவும் ஆர்டர் போட்டிருக்கிறார். கூடிய விரைவில் இந்த கூட்டணி தயாராக போகிறது. .