Simbu: சிம்பு நடிப்பில் படங்கள் வந்து ஓரிரு வருடங்கள் கடந்துவிட்டது. அறிவிப்பு வருகிறதே தவிர ஷூட்டிங் போறாரா என்ன என்று தெரியவில்லை.
விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார் என்ற சலசலப்பு அதிகமாக இருக்கிறது. அதேபோல் அவர் ஷூட்டிங் ஒழுங்கா வரமாட்டார் என்ற பேச்சும் உள்ளது.
அது மட்டும் இன்றி மணிரத்தினம் கூப்டா மட்டும் கரெக்டா போயிடுவாரு என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதற்கு தற்போது சிம்பு பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த STR
பொறந்ததிலிருந்து நான் சினிமாவுல தான் இருக்கேன். சினிமாவை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. அப்படி இருக்கும்போது படத்துல நடிக்க நான் ஏன் பிரச்சனை பண்ண போறேன்.
மணிரத்னம் மாதிரியான இயக்குனர் அப்ப எனக்கு கிடைக்கல. இருந்திருந்தால் அடுத்தடுத்து படம் வந்திருக்கும். ஏன்னா இவர் கரெக்டா பிளான் போட்டு சூட்டிங் நடத்துவாரு.
என்ன சீன் எடுக்கணும்னு அவருக்கு தெரியும். ஷூட்டிங் ஸ்பாட் வந்தப்புறம் இதை செய்யலாமா அதை செய்யலாமா என்ற குழப்பம் எதுவுமே இருக்காது.
அதே மாதிரி வாங்குன தேதியில ஷூட்டிங் நடக்கும். பேமெண்ட் கரெக்டா வரும். ஒரு ஹீரோவின் கால்ஷூட்டை வேஸ்ட் பண்ண மாட்டார்.
அதனால அடுத்து மூணு படத்துல நடிக்கணும்னு மணி சார் கூப்டாலும் மத்த எல்லா படத்தையும் தூக்கி போட்டுட்டு நான் வருவேன் என அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
இதிலிருந்து என்னால் பிரச்சினை கிடையாது. என்னை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் இப்படி இருக்கிறார்கள் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சிம்பு.