சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சிம்பு இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் அதிக கவனம் பெற்ற சுதா கங்கரா இந்த திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்திற்கு 5 தேசிய விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பே ஹோம்பல் தயாரிப்பு நிறுவனம் சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறியது. கே ஜி எஃப் படத்தை தயாரித்திருந்த இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கந்தாரா என்ற படம் வெளியானது.
இந்த படத்திற்கு வாழ்த்து சொல்லி சிம்பு ஒரு கேக்கை பட குழுவினருக்கு அனுப்பி இருந்தார். அப்போதே இவர்களின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
அதில் தான் நடிகர் சிம்பு நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் சுதா கொங்கராவின் கனவு திரைப்படமாகும். இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தொடங்க இருக்கும் இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த செய்தி சிம்பு ரசிகர்களை இப்போது குஷிப்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இப்போதே அவர்கள் கூறி வருகின்றனர்.