Simbu : சினிமாவில் இப்போது போட்டி தனுஷ் மற்றும் சிம்புக்கு தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் விஜய் அரசியல் பக்கம் சென்ற நிலையில் அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். வருஷத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்.
இதனால் இப்போது அடுத்த தலைமுறைகளான தனுஷ், சிம்பு தான் கைவசம் அதிக படங்கள் வைத்துள்ளனர். இப்போது தனுஷின் குபேரா படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது தவிர இட்லிகடை, பாலிவுட்டில் சில படங்கள் என நிறைய படங்களில் நடிக்கிறார்.
அதேபோல் சிம்புவின் கைவசம் ஐந்து படங்கள் இருக்கிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் உடனடியாக தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்.
சிம்பு கைவசம் உள்ள ஐந்து படங்கள்
அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடிக்கின்றனர். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
ஆகையால் இது வடசென்னை 2 என்பது உறுதியாகிவிட்டது. இதை அடுத்து பார்க்கிங் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் தேசிங்கு பெரியசாமி படத்தில் ஏற்கனவே சிம்பு கமிட்டான நிலையில் இதற்கான படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.
அடுத்ததாக டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். தொடர்ந்து செக்க சிவந்த வானம் மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் மணிரத்னத்துடன் கூட்டணி போட்ட நிலையில் மீண்டும் அவருடன் இணைய இருக்கிறார்.