சிம்புக்கு மாஸ் ஓபனிங் கொடுத்ததா பத்து தல.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் பத்து தல படம் வெளியானது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களைத் தொடர்ந்து சிம்புக்கு பத்து தல படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என சிம்பு ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. பத்து தல படத்தின் முதல் பாதியில் கௌதம் கார்த்திக் நடிப்பு அசத்தலாக இருந்தது. இடைவெளிக்கு பின்பு தான் சிம்புவின் என்ட்ரி வருகிறது. ஏஜிஆராக சிம்பு மிரட்டி இருந்தாலும் அவருக்காகவே சில காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் நேற்று பத்து தல படம் ட்ரெண்டானதை விட பிரபல திரையரங்கை பாய்காட் செய்தது தான் அதிகமாக டிரெண்டானது. அதாவது நரிக்குறவர் சமூகத்தில் உள்ள மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது பத்து தல படத்திற்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது. இந்நிலையில் பத்து தல படத்தின் முதல் நாள் கலெக்ஷன் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் 5 கோடி தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் சிம்புக்கு இந்த படம் முதல் நாள் மாஸ் ஓபனிங் கொடுக்கவில்லை.

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை ஒப்பிடும்போது இது மிகக் குறைவு தான். ஆனால் கௌதம் கார்த்திக் இதுவரை அவரது படங்களில் இல்லாத அளவுக்கு மாஸ் ஓபனிங்கை பத்து தல படம் கொடுத்திருக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ லான்ச் ஆகியவற்றிற்கு தயாரிப்பு நிறுவனம் பலகோடி செலவு செய்துள்ளது.

ஆகையால் போட்ட பணத்தை பத்து தல படம் எடுத்து விடுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் முதல் நாளே குறைவான வசூலை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று வெற்றிமாறனின் விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் பத்து தல வசூல் பாதிக்கக்கூடும்.