சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகைகளின் மரணம் என்பது இன்றுவரை விளக்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது. நடிகை சில்க் ஸ்மிதா தொடங்கி, சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட வி ஜே சித்ரா வரை ஏன் இறந்தார்கள், இறப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது கடைசி வரை வெளியில் தெரியாமலேயே மூடி மறைக்கப்படுகிறது. இப்படி பல நடிகைகளின் மரணம் நியாயம் கிடைக்காமலேயே அப்படியே இருக்கிறது.
இப்படிப்பட்ட மரணத்தை தழுவிய நடிகைகளில் ஒருவர் தான் மோனல். நடிகை மோனல் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் கால் பதித்து கடகடவென வளர்ந்து வந்த நடிகை ஒருவர் இப்படி தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இவருடைய மரணத்திற்கும் இன்று வரை விடை தெரியவில்லை.
நடிகை மோனல், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோயினான சிம்ரனின் உடன்பிறந்த தங்கை. இவர் இறந்த போது சிம்ரன் தன்னால் முடிந்த அத்தனை சட்ட முயற்சிகளையும் எடுத்தார். மோனல் அப்போது நடிகர் குணால் உடன் தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டிருந்ததால் இருவரும் காதலித்து ஏற்பட்ட பிரச்சனையால் அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் கூட கிளம்பின. ஆனால் நடிகை சிம்ரன் எல்லா உண்மையையும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
நடிகை மோனலின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் பிரசன்னா. மோனலும், பிரசன்னாவும் ஒருவருக்கொருவர் காதலித்திருக்கிறார்கள், வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரசன்னா மோனலின் உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் தான் மோனல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் மோனல் மரணம் அடைந்த நேரத்தில் சிம்ரன் கலா மாஸ்டர், அவருடைய தம்பி பிரசன்னா மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.
மேலும் மோனல் தற்கொலை செய்து கொண்ட விஷயம் வெளியில் தெரிய வர ஆரம்பித்த நேரத்திலேயே, நடிகை மும்தாஜ் மோனலின் வீட்டிற்கு சென்று முக்கியமான ஒரு டைரியை எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம். இது கூட சில வருடங்களுக்கு முன்பு பயங்கரமாக வைரல் ஆகிய செய்தி. நடிகை மும்தாஜ், கலா மாஸ்டருக்கு நெருங்கிய தோழி என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். தற்போது இவர்களை எல்லாம் தாண்டி சிம்ரனின் சந்தேகம் மற்றொரு நடிகர் மேல் எழுந்திருக்கிறது.
விஜய் மற்றும் மோனல் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த பத்ரி படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்த ரியாஸ் கான் தான் அந்த நடிகர். மோனல் இறப்பதற்கு முன்பு ரியாஸ் கான் தான் அவரிடம் கடைசியாக பேசி இருக்கிறார். இதுதான் சிம்ரனின் சந்தேகத்திற்கு காரணம். ரியாஸ் கான் நடன இயக்குனர் கலாவுக்கு நெருங்கிய உறவினர் தான். மோனல் இறந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் சந்தேகங்கள் தான் வளர்ந்துக் கொண்டு போகிறதே தவிர இன்றுவரை அவருடைய மரணத்திற்கு நியாயம் என்பது கிடைக்கவில்லை.