ஒரே படத்தால் தப்பித்த சிவகார்த்திகேயன்.. அப்புறம் என்ன இனி ஜாலிதான்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். அவருடைய கடின உழைப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து உள்ளார். தற்போது சினிமாவில் பெரிய அளவில் அவரது மார்க்கெட் உயர்ந்து உள்ளது.

சிவகார்த்திகேயன், ஆர் டி ராஜா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஆர் டி ராஜாவின் 24 ஏ எம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை தயாரித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், ஓரளவுதான் வசூல் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தையும் 24 ஏ எம் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே மிகப்பெரிய தோல்வியடைந்த படம் சீமராஜா. இதனால் ஆர் டி ராஜாவுக்கு பல கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக சிவகார்த்திகேயன் ஆர் டி ராஜாவுக்கு பல உதவிகள் செய்து வருகிறார்.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் சில படங்களும் தயாரிக்க தொடங்கினார். இதனால் இவர் பல கோடி கடனில் சிக்கினார். இதில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் இருந்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கை கொடுத்துள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்தபடம் டாக்டர். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது.

இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டாக்டர் படம் கடந்த அக்டோபர் 9 தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே ரெமோ
படம் தான் அதிக வசூல் சாதனை செய்துள்ளது. ரெமோ படத்தின் வசூலை டாக்டர் படம் முறியடித்தது.

டாக்டர் படம் வெளியான இரண்டு வாரங்களிலேயே உலக அளவில் அதிகம் விரும்பி பார்க்கும் படங்களில் டாக்டர் படமும் இடம் பெற்றது. இப்படத்தின் வசூலால் சிவகார்த்திகேயன் வாங்கிய மொத்த கடனையும் அடைத்துவிட்டாராம். இதனால் இனி இவர் படங்கள் வெளியாகும்போது பைனான்சியர் பிரச்சினையே இருக்காது.